நீர் ஒரு கிறிஸ்தவன்! இப்போது எப்படி?
நீங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு உங்கள் வாழ்வினை அவரிடம் அர்ப்பணித்து இருக்கின்றீர்கள் என்ற நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் காணப்படுகின்றதா?
'அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார். அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.' (யோவான் 1:12-13) என வேதாகமம் தெளிவாக கூறுகின்றது.
உங்களுடைய விருப்பத்தின்படியும், தெரிந்தெடுப்பின்படியும், நீங்கள் இயேசு கிறிஸ்துவை தேவனுடைய குமாரன் என்று ஏற்றுக்கொண்டீர்கள். அத்துடன் பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குப் புதிய வாழ்வினைக் கொடுத்து, ஆவிக்குரிய ஜீவியத்தையும் கொடுத்துள்ளார். இப்பொழுது நீங்கள் தேவனுடைய குடும்பத்தில் ஒரு அங்கத்தவராக இருக்கின்றீர்கள். 'நீங்கள் ஜெபம் பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.' (மத்தேயு 6:9-10).
ஆகவே கிறிஸ்தவன் ஒரு மதப்பற்றுள்ள ஒரு நபரைவிட வேறுப்பட்டவன், அவன் ஆலயத்திற்குச் செல்வான். ஜெபங்களை ஏறெடுப்பான். வேதத்தை வாசிப்பான். கிறிஸ்தவ நூல்களை படிப்பான். அவன் தனது சிறப்பானதைச் செய்வான். வெறும் மதத்தின் மூலமாக யாரும் கிறிஸ்தவர்களாகி விட முடியாது. அது ஒரு ஐக்கியம்.
தொடர்ந்து தேவனுடன் செல்லும் மனிதனை பாவமே வேறுபிரிக்கின்றது.
மனந்திரும்புதல் ஒன்றே தேவனுக்கும் எமது சிந்தையிலுண்டாகும் மாற்றத்திற்கும் நாம் நற்சாட்சி பெற எம்மை வழிநடத்துகின்ற ஒன்றாக இருக்கின்றது.
நாம் பாவத்தைக்குறித்து தேவனிடம் பாவ அறிக்கையிடுவோம்.
கல்வாரி சிலுவையில் எமக்காக மரித்த இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசமானது எமக்கு பதிலீடாக இருந்து பாவத்தை உடைத்து, இரட்சகர் அண்டை நாம் செல்லவும், தேவனிடமிருந்து மன்னிப்பையும் இரட்சிப்பையும் பெற்றுக்கொள்வதினாலும் உண்டாகின்றது.
தேவனின் அன்பு மற்றும் கிருபைக்கூடாக நாம் தேவனண்டை சேர முடிகின்றது. அவருடைய அரவணைப்பு பாதுகாப்பு நன்மைகள் மற்றும் ஆசீர்வாதங்களும் கிடைக்கின்றது. கீழ்க்கண்ட வேத வசனங்களை வாசியுங்கள்.
ஏசாயா 59:2 : 'உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது."
ரோமர் 3:23 : 'எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி.'
ரோமர் 6:23 : 'பாவத்தின் சம்பளம் மரணம். தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்."
ஏசாயா 53:6 : 'நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம். கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப் பண்ணினார்."
யோவான் 3:16 : 'தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.’
அப்போஸ்தலர் 17:30 : 'அறியாமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர்போலிருந்தார். இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.’
அப்போஸ்தலர் 20:21 : 'தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக்குறித்தும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதைக்குறித்தும்...’
எபேசியர் 2:19 : 'ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து,"
எமது தாய், தகப்பனின் வழியில் உண்டாகும் எமது இயற்கையான பிறப்பானது, எமக்கு பௌதீக, சரீரப்பிரகாரமான ஆத்துமாவின் வாழ்வினைத் தருகின்றது. தேவனுடைய வார்த்தையினாலும் பரிசுத்த ஆவியினாலும் உண்டாகும் ஆவிக்குரிய பிறப்பானது, உங்களுடைய மனந்திரும்புதல், பாவ அறிக்கை, மற்றும் விசுவாசத்தினை தேவனுடைய வாழ்வுக்குள் கொண்டுவரப்படுவதினால் உங்களுடைய தனிப்பட்ட இயல்புகளில் நீங்கள் புதிய சிருஷ்டிகளாகின்றீர்கள்.
எபேசியர் 2:1 : 'அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்.'
2கொரிந்தியர் 5:17 : 'இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச் சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின."
ஆகவே நீங்கள் புதிதான ஒரு ஜீவியத்தை தேவனிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ளீர்கள். அது உங்கள் வாழ்வின் பிரதியீடாகின்றது. இயேசு ஒரு மரித்துப்போன சிறுபெண்ணை உயிரோடெழுப்பிய பின்னர், அவர் அவளுக்கு போஜனம் கொடுக்கள் எனக் கட்டளையிட்டார் (லூக்கா 8:49-56).
வாழ்வுக்கு ஆதாரம் உணவு. அது வளர்ச்சியை ஏற்படுத்துகின்றது. சக்தியைத் தருகின்றது. அப்படியானால் ஒருவன் எவ்வாறு தனது ஆவிக்குரிய வாழ்விலே மிகவும் பெலனுள்ளவனாக வளர்ச்சியடையக்கூடும்?
வேத வார்த்தையை உட்கொள்ளும் கிறிஸ்தவன்.
எரேமியா (15:16) ல், வேதாகமத்தில் கூறுகிறார், 'உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன். உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது. சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது.’ தேவனுடைய வார்த்தையை நாம் எப்படி உட்கொள்ள முடியும்? அதை வாசிப்பதாலும், தியானிப்பதாலும், சிந்திப்பதாலுமே. தாவீது (சங்கீதம் 1:2) தேவனுடைய வார்த்தையை இரவும் பகலும் தியானிப்பதைக் குறித்து எழுதுகிறார். அப்படியே தேவன் யோசுவாவிடம், (யோசுவா 1:8) : 'இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக. இதில் எழுதியிருக்கிறவைகளின்படி யெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக் கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக. அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்.’ தேவன் அதை அவரது வழியில் செய்யும்படிதான் கூறுகிறார். வாழ்வு செழிப்படையவும் நல்ல பலனைத்தரும்படியாகவே கூறினார். இயேசுவும் கூட மத்தேயு 4:4 ல் : 'மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே...' எனக் கூறினார்.
சாதாரண மக்களும் கூட சுகமாக இருக்க விரும்புகிறார்கள். தேவனுடைய வார்த்தையானது எமது முழு சரீரத்திற்கும் ஆரோக்கியமாகும். வாசிக்கவும் நீதிமொழிகள் 4:20-22. இன்னும் சங்கீதம் 107:20 ல், தேவன் கூறுகிறார் 'அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கி றார்.’ இன்னும் அநேக வாக்குத்தத்தங்கள் வேதாகமத்தில் உள்ளன. 2கொரிந்தியர் 1:20 ல், : 'எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும் படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே.' எரேமியா 1:12ல், : 'என் வார்த்தையைத் தீவிரமாய் நிறைவேற்றுவேன்.' என்றார். இவ்விதம் உங்கள் தேவைகளை தேவனிடம் கூறுங்கள். எவ்வளவு காலம் வேதத்தை வாசிக்கலாம்? தினமும் வாசிக்கலாம். ஒரு அறிஞன் இவ்விதம் கூறினார், 'வேதாகமம் இல்லையென்றால் காலை உணவு இல்லை. அது என்னைக் கட்டுப்படுத்தும் சட்டமல்ல. அது என்னை ஞாபகப்படுத்தும் குறிக்கோள் வாக்கியமாகும்."
ஒரு ஜெபிக்கின்ற மனிதனாகுதல்.
தமஸ்கு நகரத்திலே சவுல் என்பவர் மனந்திரும்பிய பின்னர், நடந்ததை நாம் அப்போஸ்தலர் 9:11 ல் வாசிக்கலாம். : 'அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான்.’
இயற்கையாகவே ஒரு கிறிஸ்தவன் ஜெபிக்கவேண்டியவன். பரலோகத்தின் பிதாவை நோக்கி மன்றாடவேண்டியவன். அவருக்கு நன்றிகளையும் துதிகளையும் அன்பையும் ஏறெடுக்கவேண்டியவன். அத்துடன் அவன் தன்னுடைய தேவைகள், பிரச்சனைகள் மற்றும் தேவையான வழிநடத்துதல், பாதையைக் காட்டும்படியாகவும் மன்றாட வேண்டியவனாக இருக்கின்றான். தாழ்மையுடனான கீழ்ப்படிதலுள்ள ஜெபத்தின் மூலமாகவே நாம் தேவனுடன் சரியான ஐக்கியத்தைக் கொண்டிருக்க முடியும்.
வேதாகமம் எமக்கு ஜெபத்தைப் பற்றி, தைரியமாக புத்தியாக சொல்லுகின்ற காரியம் என்னவென்றால் ஜெபத்தின மாதிரிகளை நாம் கடைபிடிக்கவேண்டும் என்பதாகும். மத்தேயு 7:7 வாக்குத்தத்தத்தில், 'கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள். தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.' இயேசு கூறினார், : 'சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.’ (லூக்கா 18:1). அவர் உலகத்தில் இருந்தபோதே ஜெபத்திற்கு மிகப்பொரிய உதாரணமாக திகழ்ந்தார். 'அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்க்குப்போய், அங்கே ஜெபம் பண்ணினார்." (மாற்கு 1:35) மேலும் மாற்கு 6:46. லூக்கா 5:16 மற்றும் 6:12 ஐ வாசிக்கவும்.
எத்தனை தடவை நான் ஜெபிப்பது? ஜெபமானது இருதயத்தினதும் ஆத்துமாவினதும் செயற்பாடாகவே இருக்கின்றது. ஆகவே எப்பொழுதெல்லாம் தெளிவாக இருக்கின்றீர்களோ எப்படி ஒரு காந்தத்தை நோக்கி ஒரு மானியிலுள்ள இரும்பு கம்பி நகருகின்றதோ அவ்வாறே தேவனுடன் நாம் ஐக்கியப்படவேண்டும். முடிகின்றபொழுதெல்லாம் விசேஷமாக ஜெபிக்கும்படியாக விசேஷித்த இடத்தை தெரிவுசெய்யுங்கள். குறிப்பாக ஒவ்வொரு நாளையும் வேத வாசிப்புடனும் ஜெபத்துடனும் ஆரம்பியுங்கள்.
மற்றவர்களோடு இணைந்து ஆராதிப்பவராக மாறுதல்.
அப்போஸ்தலர் இரண்டாம் அதிகாரத்தில் கிறிஸ்தவ சபையின் ஆரம்பத்தினைக் காணலாம். வசனம் 42 ல் ஏனைய முதல் கிறிஸ்தவ மக்களைக் குறித்து வாசிக்கக் காணலாம். : 'அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்...' இதுவொரு நல்ல முன்மாதிரி. அவர்கள் இன்னமும் வேதாகம மாணவர்களே. அவர்கள் ஐக்கியப்படுவதில் அதிக ஆர்வமாக இருந்தார்கள். அவர்கள் தேவனுடைய இராப்போஜனத்தை உட்கொள்ளு வதிலும் அப்பத்தை பங்கிட்டு உண்பதையும் கடைப்பிடித்தார்கள். (1கொரிந்தியர் 11:23-26 ஐ பார்க்கவும்). மேலும் அவர்கள் சேர்ந்து ஜெபித்தார்கள். எபிரெயர் 10:25 ல் வாசிக்கிறோம், : 'சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்தி சொல்லக்கடவோம். நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்தி சொல்லவேண்டும்.' எனவும் சங்கீதம் 68:6ல்: 'தேவன் தனிமையானவர்களுக்கு வீடுவாசல் ஏற்படுத்தி, கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார். துரோகிகளோ வறண்ட பூமியில் தங்குவார்கள்.' வேதாகமத்தை விசுவாசிக்கும், சுவிசேஷத்தை அறிவிக்கும் ஒரு சபையானது கிறிஸ்துவுக்குள் ஒரு குடும்பமாக இருக்கின்றது. ஒன்றாக வளரவும், ஒன்றாக ஆராதிக்கவும், பகிர்ந்துகொள்ளவும், துதிக்கவும், கொடுக்கவும், உதவி செய்யவும் தேவனைப்போலாவதற்கு ஒருவரையொருவர் தைரியப்படுத்தவும் வேண்டியவர்களாக இருக்கின் றனர். எமது சந்தோஷத்தையும் வெற்றிகளையும் பகிர்ந்துகொள்வது போலவே, அதைரியப்படுகின்ற, தோல்வியுற்ற, மனவேதனையுள்ள, பிரச்சனையுள்ள வேளைகளில் இதுவொரு ஆசீர்வாதமான உட்சாகமான தைரியப் படுத்தும், ஆறுதல்படுத்தும் எமது ஒவ்வொருவரின் சுமைகளையும் பகிர்ந்துகொள்ளும் ஒரு விசுவாசகூட்டமாக ஜெபிக்கும் மக்கள் இருக்கின்றார்கள்.
எத்தனை தடவைகள் நான் சபை கூடுகைகளில் பங்கெடுக்கின்றேன்? சாத்தியமான நேரமெல்லாம் நான் பெற்றுக்கொள்வதற்காக அல்ல, கொடுப்பதற்காகவே போகின்றவராக இருப்போமாக.
ஞானஸ்நானம் பெற்ற விசுவாசியாக.
புதிய ஏற்பாட்டிலே ஞானஸ்நானமானது விசுவாசிப்பவர்களினால் (மாற்கு 16:16) மனந்திரும்பியவர்களினால் (அப். 2:38) தேவனுடைய வார்த்தையை பெற்றுக் கொண்டவர்களினால் (அப். 2:41) கிறிஸ்துவின் கட்டளைகளைக் கைக்கொள்கின்றவர்களினால் கடைபிடிக்கப்பட்டது. (மத்.28:19) : 'ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்.' ஆகவே வேத வசனங்களைக் கடைபிடிப்பவர் இதிலிருந்து சரியான தீர்மானங்களை எடுப்பவராகவே இருப்பார்.
புதிய ஏற்பாட்டிலுள்ள சபைகளில், அல்லது மக்கள் கூடுகைகளில் அவர்கள் எவ்விதம் ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொண்டார்கள்? வேதாகமத்தின்படி ஒரு தனிநபர் முற்றிலுமாக தண்ணீருக்குள் முழ்கி, அத்துடன் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் என்ற தேவனுடைய நாமத்தில் பெற்றுக்கொள்வார்கள். இந்த மூன்று நபர்களும் ஒன்றாக இருப்பதை தெளிவாக வேத வசனத்தின் ஊடாக நாம் காண்கின்றோம். ரோமர் 6:3-5 ல், நாம் தெளிவாக காண்கிறோம், ஞானஸ்நானமானது ஒருவருடைய ஆவிக்குரிய மனந்திரும்புதலுக்கான ஒரு வெளியரங்கமான அடையாளமாகவே அல்லது ஒரு மாதிரியாகவே உள்ளது என்று. எப்பொழுது ஒரு விசுவாசியானவன் ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொள்ளலாம்? தேவனாகிய இயேசு கிறிஸ்துவை உள்ளத்தில் பெற்றுக்கொண்டபின்னர் எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக பெற்றுக்கொள்ளலாம். (அப். 2:41. 10:47,48).
பரிசுத்தஆவியில் நிறைந்த விசுவாசியாக.
ஒருவரும் தங்களுடைய சொந்த பெலத்தில் கிறிஸ்தவனாக வாழ முடியாது. ஏனெனில் தேவன் இவ்வழியினை பயன்படுத்துவதில்லை. இந்த முயற்சியானது அற்ப பிரயோசனமானது. தேவன் ஒரு விசுவாசியானவன் பரிசுத்த ஆவியானவரினால் நிறைந்தவனாக வாழ வேண்டுமென்றே விரும்புகின்றார். அவன் ஒரு கிறிஸ்தவ வாழ்க்கையினை முற்றும் முழுதாக கனி நிறைந்த வாழ்க்கையினை கிறிஸ்துவுக்காக பயனுள்ள சேவையை செய்யும்படியாகவே விரும்புகின்றார்.
கிறிஸ்துவானவர் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னர், அவர் இன்னொரு நபரை வெளிப்படையாகத் தந்தருளுவதாக அவர் வாக்குப்பண்ணினார். ஒரு விசுவாசியின் சரீரத்திற்குள் பரிசுத்த ஆவியானவர் வந்து அதை ஆலயமாக்கி அங்கு வாசம் பண்ணுவார். (1கொரி 6:19). 'துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினாலே நிறைந்து...' (எபேசியர் 5:18) ன்படி தண்ணீரில் ஞானஸ்நானம் பெறவேண்டியது ஒரு கட்டளையாகும்.
ஆண்டவராகிய இயேசு தமது சீஷர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படி கட்டளையிட்டார். அவர்கள் ஊழியத்தை ஆரம்பிக்கும் முன்பாக அவர் அவர்களை பரிசுத்த ஆவியினால் நிரப்புவதாக கூறினார் (லூக்கா 24:49. அப். 1.8). இது பெந்தேகோஸ்தே நாளன்று நிறைவேறியது. அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில், பரிசுத்த ஆவியானவர் வந்து வாஞ்சையுள்ள ஆத்துமாவின் தாகத்தை நிரப்பினார். ஆகவே அவர்கள் பலமொழி பாஷைகளில் பேசத் தொடங்கினார்கள். அந்த மொழியை அவர்கள் முன்பு கற்றிருக்கவில்லை. அது பரிசுத்த ஆவியானவரின் வல்லமையின் கீழ் நடைபெற்றது. மேலும் அப்போஸ்தலர் 10:44-48. 19:5,6 ஐ பார்க்கவும். யார் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுத்தது? ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே ஞானஸ்ஞானம் கொடுத்தவர். ஒரு போதகரோ அல்லது இன்னொரு விசுவாசியோ உங்களை தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுப்பார்கள். ஆனால் ஆண்டவராகிய இயேசு ஒருவரே பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பவர் (மத்தேயு 3:11. லூக்கா 3:16).
இயேசுவானவர் நாம் அவரண்டை விசுவாசத்துடன் வந்து அந்த பரிசுத்த ஆவியானவரை அருந்தும்படி அழைக்கின்றார். (யோவான் 7:37-39).
ஒவ்வொரு விசுவாசியும் தனிப்பட்ட முறையில் இந்த ஞானஸ்நானத்தினால் நிறைக்கப்பட வேண்டும் (அப் 2:38,39). தொடர்ந்தும் நிறைக்கப்படுதல் அவசியம் (எபேசியர் 5:18). 'நிறைக்கப்படுதல்' என்ற வார்த்தையின் அர்த்தமானது ஒரு சம்பவம் ஒரு இடத்தில் நடைபெறுவது என்பதாகும்.
பெற்றுக்கொள்பவராக அல்ல - கொடுப்பவராக மாறு.
சபையின் ஊடாக பல்வேறு செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்கு நமக்கு ஒருவேளை பணம் தேவைப்படலாம். தேவனுடைய வேலையில் காணப்படுகின்ற பொருளாதார தேவைகளை அவர் தமது மக்களைக் கொண்டு நிறைவேற்றி அவர்களை ஆசீர்வதிப்பார். எமது ஆராதனையின் ஒருபகுதி கொடுத்தலாகும். அத்துடன் அவரிடமிருந்து மேலான ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வதுமாகும். ஆகவே தான் வேதாகமமானது அதிகமாக கூறுகின்ற காரியம், எம்மை நாமே ஒப்புக்கொடுப்பது மட்டுமின்றி, கிறிஸ்துவினுடைய தேவ ராஜ்ய பணிக்காக நாம் கொடுக்கவும் வேண்டும் என்பதாகும். 'உற்சாகமாய்க் கொடுப்பவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்" (2கொரி 9:7).
எவ்வளவு நாம் கொடுக்கலாம்?
பழைய ஏற்பாட்டின் காலத்தில், தேவனுடைய சட்டத்தின் பிரகாரம், இஸ்ரவேல் மக்கள் பத்தில் ஒன்றைக் கொடுத்தார்கள். மல்கியா 3:8-10.
1கொரிந்தியர் 16:2 ல் வாசிக்கிறோம், 'நான் வந்திருக்கும்போது பணஞ் சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன்..' வாரத்தின் முதலாம் நாளில், ஞாயிறு, தேவனுடைய இராப்போஜனப் பந்தியில் வந்து நிற்கும் கிறிஸ்தவர்களுக்கு தேவனுடைய வார்த்தையானது வெளிப்பட்டதோடு அவர்கள் பொதுவாக ஆராதிப்பதில் மகிழ்ச்சியடைந்தார்கள். (அப்.20:7) அத்துடன் அவர்கள் தேவனுடைய பணிக்கென்று காணிக்கைகளையும் கொண்டுவந்தார்கள்.
எம்மில் அநேகருக்கு, இது ஒரு தேவனை விசுவாசிப்பதன் அடையாளமாகவே இருக்கின்றது. ஆனால் கொடுக்கப்பட்டுள்ள வாக்குத்தத்தத்தைக் கவனிக்கவும். லூக்கா 6:38, 'கொடுங்கள், அப்பொழுது உங்களுக் கும் கொடுக்கப்படும். அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார் கள். நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார்...’
தேவனுடன் வெளிப்படையாக இருத்தல்.
உங்கள் தவறுகளை மறைக்க முற்படவேண்டாம். ஒவ்வொரு விசுவாசிகளும் சமயத்திற்கு சமயம் தோல்வியடைகிறார்கள். தேவனுக்கு தேவையானது வெளிப்படையானதும் நேர்மையானதுமான நடத்தையே. 'நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.' (1யோவான் 1:9) இது கிறிஸ்தவர்களுக்காகவே எழுதப்பட்டுள்ளது. ஆகவே தேவனுக்கு எப்பொழுதும் கணக்கொப்புவியுங்கள். பாவமானது, சூரியனுக்கு கீழே கடந்துபோகும் மேகத்தைப் போன்றது. அது சூரியனிடமிருந்து எம்மை மறைக்கின்றது. உடனடியான மனந்திரும்புதலானது தேவனின் மன்னிப்பைக் கேட்பதோடு, அவரிடமிருந்து அந்த மேகத்தை அகற்ற உதவிசெய்கின்றதாக இருக்கின்றது.
ஒரு சாட்சி பகரும் விசுவாசியாக.
நாம் யார் என்றும் நாம் என்ன சொல்கின்றோம், என்ன செய்கின்றோம் என்றும் நாம் வாயின் ஊடாகவும் வாழ்க்கையின் ஊடாகவும் ஒவ்வொரு கிறிஸ்தவனும் சாட்சி பகிரவேண்டியது அவசியம். மற்ற விசுவாசிகளுக்கு தங்கள் தனிப்பட்ட சாட்சி மற்றும் ஊழியத்தின் பாதையில் கிறிஸ்து செய்த சாட்சிகளை பகிர்ந்துகொள்வதன் ஊடாகவே அநேகர் விசுவாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்கள். மறுபக்கம், முதல் கிறிஸ்தவர்கள் பாடுகளின் நிமித்தமாகவே எருசலேமிலிருந்து சிதறடிக்கப்பட்டார்கள். அவர்கள் 'சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, சுவிசேஷவசனத்தைப் பிரசங்கித்தார்கள்..' (அப். 8:4) இவ்வாறு சுவிசேஷமானது பரவியதால் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருகியது. இவ்வாறான வழிமுறைகளில் தேவன் எம்மையும் பாவிக்கும்படியாக தேவனிடத்தில் மன்றாடுவோமாக.
விசுவாசமுள்ள ஒரு விசுவாசியாக. (ரோமர் 6:8)
பழைய ஏற்பாட்டிலுள்ள விசுவாசத்திற்கான வார்த்தை, நம்பிக்கை, 'விசுவாசம்' என்பன 150க்கும் மேற்பட்ட தடவை காணப்படுகின்றது. தேவனுடைய மக்களுக்கு இருக்கின்ற விசுவாசத்தைக் குறித்து எபிரெயர் 11ம் அதிகாரம் விளக்குகின்றது. கிறிஸ்தவ வாழ்க்கையானது தேவனிடத்தில் நம்பிக்கைகொண்டுள்ள ஒரு விசுவாச வாழ்வாகும். அநேக தடவைகள் விசுவாசத்தின் நிமித்தமாகவே இயேசுவானவர் பதிலளித்துள்ளார். 'உன் விசுவாசத்தின்படி உனக்கு ஆகக்கடவது' (மத்தேயு 9:29) என்றார். ஒரு விசுவாசி கூறினார், 'நான் விசுவாசத்திற்காக ஜெபித்தேன். நான் வேதாகமத்தை திறந்து வாசித்தேன். 'தேவனுடைய வார்த்தையை கேட்டு கேட்டு இருப்பதன் மூலமாக விசுவாசம் வளருகின்றது' ஆகவே நான் வேதாகமத்தை வாசிக்க வாசிக்க என்னுடைய விசுவாசமும் வளரத் தொடங்கியது.
நம்பிக்கை நிறைந்த விசுவாசியாக.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் அனைத்து மெய் விசுவாசிகளுக்கும் ஆசீர்வாதமான நம்பிக்கையை தேவனுக்குள்ளாக வைத்திருக்கின்றார். அவ்வாறே அவர் தம்முடைய மக்களை வரவேற்கும்படியாக மீண்டும் இந்த உலகத்திற்கு இயேசு கிறிஸ்து வர இருக்கின்றார். அவருடைய முதலாவது வருகையில், தேவனுடைய கிருபை மற்றும் இரக்கத்தால் இயேசு கிறிஸ்துவின் ஊடாக மனிதனின் பாவங்களை போக்கியது. அவருடைய இரண்டாவது வருகையில் அவரை விசுவாசித்து மனந்திரும்பி இரட்சிக்கப்பட்ட ஒவ்வொருவரையும் வரவேற்க வருப்போகின்றார். அவர்களே அவருடைய சபையாகவும், மணவாட்டியாகவும் அழைக்கப்படுகிறார்கள். 'அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே, கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்." (எபிரெயர் 9:28) இந்த வாக்குத்தத்தமானது தேவதூதர்களினால் குறிப்பிடப்பட்டுள்ளது. 'அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்த வர்கள் இரண்டுபேர் அவர்களருகே நின்று: கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்;கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.’ (அப்.1:10,11). இயேசுவானவரும் கூட இவ்விதமாக கூறினார் 'நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்...’(யோவான் 14:3)
புதிய ஏற்பாட்டிலே நூற்றுக்கும் மேற்பட்ட தடவைகள், அடிக்கடி உபத்திரவப்பட்ட சபைக்கு காத்திருக்கும் இந்த நம்பிக்கையைக் குறித்து காணலாம்.
'பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.." (1தெசலோனிக்கேயர் 4:17).
பெறப்போகும் கிரீடத்தைக் குறித்த உறுதி.
அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிடுவதுபோல, நாம் பெற்றுக்கொள்ளப்போகும் வெகுமதிக்காக ஊழியம் செய்யாமல், ஒவ்வொரு ஆணும் பெண்ணுக்காகவும் மரித்தவருக்குக் காட்டும் அன்பினால் ஊழியம் செய்யவேண்டும். அவருக்கென்று உத்தமமாக ஊழியம் செய்தவர்களுக்கு கிடைக்கும் வெகுமதியைக் குறித்து வேதாகமமானது தெளிவாக காட்டுகின்றது. 'கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது. ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள்.' (2கொரிந்தியர் 5:14).
இரட்சிப்பு ஒரு வெகுமதி. யோவான் 10:28, எபேசியர் 2:8. இந்த வெகுமதியானது சம்பாதித்துக் கொண்டவை. 1கொரிந்தியர் 3:11-15. 2கொரிந்தியர் 5:10. வேதாகமத்தின் கடைசி புத்தகத்தில் வாசிக்கலாம், 'இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடே கூட வருகிறது." (வெளிப்படுத்தல் 22:12).
நாம் நமது தேவனுக்காகவும் அவருடைய சபைக்காகவும் இயலுமான அளவு மனதார ஊழியம் செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
தைரியப்படுத்தும் வார்த்தைகள்
கிறிஸ்தவனுக்கான தேவனுடைய நோக்கமானது கிறிஸ்துவுடன் இணைந்திருப்பதாகும். (2கொரிந்தியர் 3:18). இதனால்தான் அப்போஸ்தலனாகிய பவுல் ஜெபத்துடன் வேலைசெய்தார் (கொலோசெயர் 1:28,29). தேவன், எமது பாவத்தை நீக்கி, தமது சாயலை எமக்குள் மீள உருவாக்குமளவும் அளவற்ற அன்போடு அவர் எமக்குள் கிரியைசெய்கிறார்.
பரிசுத்த ஆவியானவருக்கு அநேக ஊழியங்கள் உண்டு. ஒன்று போதிப்பது. யோவான் 14:26. அவர் அனைத்து ஆசிரியர்களை விட மேலானவர். தேவன் தமது சபையில் பலவிதமான ஊழியங்களையும் ஊழியக்காரரையும் வைத்திருப்பதை நாம் அறிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். (பார்க்கவும் எபேசியர் 4:11. ரோமர் 12:6-8. 1கொரிந்தியர் 12:28-31) உங்களுக்கு போதித்து வழிநடத்தும்படி பரிசுத்த ஆவியானவருக்கு கீழ்ப்பட்டிருங்கள்.
எல்லா கிறிஸ்தவர்களைப் போலவே பாவ சோதனைகள் வருமென்று நீங்கள் பயப்படவேண்டாம். தேவனுடைய வார்த்தையிலும் வாக்குத்தத்தங்களிலும் தங்கியிருங்கள். 'மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார். உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்க தாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்." (1கொரிந்தியர் 10:13. மேலும் யாக்கோபு 1:12-15 ஐ வாசிக்கவும்).
அன்பே இந்த உலகத்தில் மிகப்பெரிய வல்லமையுடையது. ஆகவே எப்பொழுதும் தேவனுடைய அன்பில் திளைத்திருக்க முற்படுங்கள். அதன் இரகசியமானது எப்பொழுதும் பரிசுத்த ஆவியினால் நிறைந்திருங்கள்.
'மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்தஆவியினாலே தேவஅன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக் கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது."(ரோமர் 5:5). 'தேவன் நமக்குப் பயமுள்ளஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்." (2தீமோத்தேயு 1:7).
'இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது@ இவைகளில் அன்பே பெரியது." (1கொரி 13:13). தேவனுடைய அன்பின் தரத்தினை அறிந்துகொள்ள வாசியுங்கள் 1கொரிந்தியர் 13:4-8 வரை.
தேவன் எமக்கு வல்லமையும், அதிகாரத்தையும், சாத்தான் மற்றும் பிசாசின் மீது வெற்றியையும் இயேசு கிறிஸ்து என்ற நாமத்தின் ஊடாக தந்திருப்பதை மறந்துவிடாதிருங்கள்.
'இதோ, சர்ப்பங்களையும் தோள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன். ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது.." (லூக்கா 10:19)
'ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள். பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்..' (யாக்கோபு 4:7)
'விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்.' (மாற்கு 16:17)
'பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள். ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.' (1யோவான் 4:4)
தேவனுடைய பிள்ளைகளுக்கு எதிராக சாத்தான் பாவிக்கும் ஆயுதங்களில் ஒன்று தாழ்வுமனப்பான்மை. இதற்குள் உங்கள் ஆவியை தள்ளிவிடாதிருங்கள். 'இவைகளைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?' (ரோமர் 8:31)
நீங்கள் வாசித்த இவற்றை உங்கள் வாழ்க்கையில் உண்மையாகவே நீங்கள் பிரயோகப்படுத்துவீர்களாயின், நீங்கள் பெலனடையவும் பிரகாசிக்கவும் தேவனுக்கு மகிமை தருகின்ற கனியுள்ள வாழ்க்கை வாழவும் கூடியதாயிருக்கும்.
தேவனுடைய பிள்ளையாவது எப்படி? அதன் அர்த்தமாவது:-
தேவனுடன் சரியான ஐக்கியத்திற்குள் வருவது (2கொரி 5:20).
உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படுவது (அப். 2:38)
புதிதாய் பிறத்தல் - தேவனுக்குள்ளாக புதிய வாழ்வினை, புதிய ஆவிக்குரிய வாழ்வினை பெறுதல் (பாவத்தை களைதல்).
எமது வாழ்வில் ஆவிக்குரிய வாழ்க்கையை ஏற்படுத்தக் கூடிய ஒரே ஒருவர் தேவன் மட்டுமே. அவரே அனைத்து வாழ்விற்கும் மூலாதாரம். (யோவான் 3:3-8)
தேவனுடைய குடும்பத்தில் ஒரு அங்கத்தவராக, தேவன் ஒருவரே எமது பரம பிதா என்று அறிந்துகொள்ளுதல் (மத்தேயு 6:6-13).
எமக்கு நித்திய ஜீவனைத் தருபவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே என்ற உறுதியுடள் அவருடைய சீஷராக தேவனுக்கு ஊழியர்களாக இருத்தல் (மத்தேயு 4:10. 28:19,20. யோவான் 3:36).
தேவன் உங்களை நேசிப்பதோடு, நீங்கள் அவரை அறியவேண்டுமென அவர் விரும்புகிறார். அவரே உலகத்தையும் முழு அண்ட சராசரங்களையும் உருவாக்கியவர். ஆதியாகம் 1:1 ல் 'ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்...'
பாவமானது தேவனுக்குக் கீழ்ப்படியாமையே ஆகும். மனிதர்களின் நன்நடத்தை ஊடாக அது வெளிப்படுவதினால் உபத்திரவமும் துன்பமும் ஏற்படுகின்றன. ரோமர் 3:23 இவ்வாறு கூறுகின்றது: 'எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி.'.
மனிதனின் பாவத்திற்கான தண்டனையை நாம் பெற்றுக்கொண்டு அழிந்துபோகாதபடிக்கு தேவன் தம்முடைய குமாரனை அனுப்பி அதை ஏற்றுக்கொண்டு மனிதர்களாகிய எம்மீது அன்பு கூர்ந்துள்ளார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே அவ்வாறு மனிதனான தேவன். அவருக்கு இன்னும் பல நாமங்கள் உண்டு. மத்தேயு 1:23 ல், 'இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்."
இஸ்ரவேல் என்ற நாட்டிலே, நமது ஆண்டவராகிய இயேசு பிறந்தார், வாழ்ந்தார், மரித்தார், ஆனாலும் உயிரோடு எழுந்தார். (மத்தேயு 2:1).
இயேசுவை மரணத்திற்குள்ளாக்கிய, எருசலேமிலே ஒரு கல்வாரி சிலுவையில், நம் ஒவ்வொரு மனிதருடைய பாவங்களுக்கான தண்டனையையும் அவர் சுமந்தார். ஏசாயா 53:5,6 ல் இவ்வாறு கூறுகின்றது: 'நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது.' 'அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம்@ கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்...'
நீங்கள் செய்ய வேண்டியது என்ன:
உங்கள் பாவங்களை அறிக்கையிடுங்கள், மனந்திரும்புங்கள். பாவத்திலிருந்து திரும்பி தேவனிடம் மன்னிப்பை பெற்றுக்கொள்ளுங்கள். 1யோவான் 1:9ல், 'நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.' என்றும் 1யோவான் 1:7ல் '.அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம். அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.' என்றும் கூறுகின்றது.
இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக்கொள்ளுங்கள். யோவான் 1:12ல், 'அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்..'
கீழ்கண்ட ஜெபத்தை உங்கள் இருதயத்திலிருந்து ஜெபியுங்கள்.
'அன்பின் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, என்னை உமக்கு அர்ப்பணிக்கும்படியாக
நான் உம்மண்டை வருகின்றேன். நான் ஒரு பாவி என்பதை அறிக்கையிடுகின்றேன். எனது அனைத்து பாவங்களையும் மன்னிக்கும்படி வேண்டுகின்றேன். உம்மிடத்தில் நான் மன்னிப்பையும் சுத்திகரிப்பையும் வேண்டி நிற்கின்றேன். நீர் சிலுவையில் எனக்காக மரித்தீர் என்று நான் நம்புகின்றேன். உம்மை எனது இருதயத்திற்குள் எனது தனிப்பட்ட இரட்சகராகவும் எஜமானாகவும் ஏற்றுக்கொள்ளுகின்றேன். என்னை உமக்குரியவனாக நீர் ஏற்றுக்கொண்ட படியினாலும் உருவாக்கின படியினாலும் உமக்கு நன்றியைச் செலுத்துகின்றேன். என்னுடைய நாளாந்த ஜீவியத்தில் கனியுள்ளதும் உமக்காக வாழத்தக்க தாக வாழ எனக்க உதவிசெய்தருளும். உம்முடைய நாமத்திலே ஜெபிக்கின்றேன். ஆமென்.'
உங்களை ஆண்டவராகிய இயேசு ஏற்றுக்கொண்டபடியினால் அவருக்கு நன்றியைச் செலுத்தி சந்தோஷமாக இருங்கள்.
யோவான் 6:37 கூறுகின்றது,
'பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும். என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை..’