ஒரு சாதாரண வேலைக்காரனாகவே இயேசு வந்தார்! எல்லா கிறிஸ்த்தவத் தலைவர்களுமே ஒரு ஊழியக்காரனின் ஜீவியம் எப்படி இருக்கவேண்டுமென்று பிரசங்கிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், நடைமுறையில் ஒரு "வேலைக்காரனாய்" (ஊழியக்காரனாய்) இருப்பதன் அர்த்தம் என்ன? அந்த நடைமுறைக்கு ஒப்பிட்டே நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன். கிறிஸ்த்தவத் தலைவர்களே, உங்கள் சக ஊழியர்களை நீங்கள் எவ்வாறு நடத்துகிறீர்கள்? உங்கள் குழுவோடு நேற்றுத்தான் சேர்ந்த ஒரு இளைய-ஊழியனை நீங்கள் எவ்வாறு நடத்துகிறீர்கள்? அந்த ஊழியன் மெய்யாகவே உங்களுக்கு ஒரு சகோதரனாய் இருக்கிறாரா? அல்லது அந்த சகோதரன் உங்களுக்கு அஞ்சி ஜீவிக்கிறாரா? காரியம் அப்படியாய் இருக்கும்போது, "ஊழியனின் தகுதி" குறித்து நீங்கள் காலமெல்லாம் பிரசங்கித்துக் கொண்டிருந்தாலும், நீங்களோ அதைப்பற்றி சிறிதும் விளங்கிக் கொள்ளவில்லை என்றே உங்களுக்கு நான் கூற விரும்புகிறேன். ஆம், உங்கள் கண்கள் இன்னமும் இயேசுவைக் காணவில்லை! இயேசுவோ அத்தனை எளிமையாய் இருந்தார். அவர் ஒருபோதும் ஜனங்களுக்கு மேலாய்த் தன்னை உயர்த்தவேயில்லை! அவர் தம்மை "மனுஷ குமாரன்" என்றே கூறினார். அதற்கு அர்த்தம், "அவர் ஒரு சாதாரண மனிதர்" என்பதேயாகும். அவர் அத்தனை பரிசுத்தராய் தன் பிதாவோடு நித்தியகாலமும் "தேவகுமாரனாய் ஜீவித்தவர்! ஆனால் அவரோ, கீழே இறங்கி வந்து, இந்த பூமியில் ஒரு சாதாரண மனிதனாகவே வாழ்ந்தார்! எல்லாவிதத்திலும் அவர் தன் சகோதரர்களுக்கு ஒப்பாய் மாறினார்!!
எல்லாவிதத்திலும் நம் சகோதரர்களுக்கு ஒப்பாய் நாமும் மாறவேண்டுமென்றால், நம்மிலுள்ள "ஏதோ ஒன்று " சாகவேண்டும்! இயேசுவைப்பற்றி இவ்வாராகவே கூறப்பட்டுள்ளது, "அவர் தன்னைத்தானே மரணபரியந்தமும் தாழ்த்தினார்". இவ்வாறு நம்முடைய "சுயத்திற்கு மரிக்கும்போதுதான், நம்முடைய தாழ்மையை நாம் நிரூபித்திட முடியும்! கோதுமைமணியானது நிலத்தில் விழுந்து "சாகும் போதுதான்" மிகுந்த கனிகளைத் தரமுடியும் என இயேசு கூறினார். இந்த சத்தியத்தை 30 ஆண்டுகளுக்கு முன்பாக, மெய்யான நடைமுறை கிறிஸ்த்தவ வாழ்க்கைகுப் போராடிய நேரத்தில் நான் கண்டுபிடித்தேன். நான் இந்தியாவில் ஆண்டவருக்காகச்செய்திடும் வலிமையான ஊழியம் "நிலத்தில் விழுந்து சாவதுதான்" என்பதை அப்போது நான் கண்டுகொண்டேன்! ஆம், என் சுய-சித்தத்திற்கு சாவு! ஜனங்கள் என்னைக்குறித்து என்ன எண்ணுகிறார்கள் என்ற அபிப்பிராயங்களுக்கு சாவு! என் சுய-இலட்சியங்களுக்கு சாவு! சுயமாய் எண்ணிட்ட என் "இலக்குகளுக்கு" (Goals) சாவு! என் பண ஆசைக்கு சாவு இவ்வாறு ஒவ்வொன்றாய் தொகையிட்டு மொத்தத்தில் "என் சுயத்திற்கு" செத்திடும் வாழ்க்கையை நான் மேற்கொண்டேன்! இந்த வழ்க்கையை மேற்கொண்டபிறகு எனக்கு இயேசுவே எல்லாமுமாய் மாறினார்!! இப்போது நான் ஒவ்வொரு நாளும் இயேசுவை நோக்கிப்பார்த்து, சங்கீதக் காரனைப்போல நேர்மை கொண்ட நெஞ்சத்தோடு....... " பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத்தவிர எனக்கு வேறே விருப்பமில்லை!" (சங்கீதம் 73:25) என என்னால் கூறிட முடிகின்றது!!
நான் படுக்கையில் படுத்திருக்கும் சமயங்களில் "ஆண்டவரே, என் ஊழியம் எனக்கு "தேவன்" அல்ல. நீர் ஒருவரே என் தேவன்! உமக்கு நான் தந்த ஸ்தானத்தை வேறு யாதொருவருக்கும் நான் தந்திடமாட்டேன். நீரே எனக்கு எல்லாமுமாய் இருக்கிறீர். என்னுடைய சத்தத்தை நீர் என்னிடமிருந்து எடுத்துக்கொள்ளலாம் அல்லது என் சரீரத்திற்கு "வாதம்" வர நீர் அனுமதிக்கலாம் அல்லது நீர் விரும்பிய எதையும் எனக்கு நீர் செய்யலாம்! ஆகிலும், நானோ உம்மை என் முழு இருதயத்தாலும் தொடர்ந்து நேசிப்பேன்" என நான் தேவனைப் பார்த்து அடிக்கடி கூறுவதுண்டு. ஆம் நான் பெற்ற சந்தோஷத்தை யாரும் என்னிடமிருந்து பறித்துக்கொள்ளவே முடியாது...... ஏனென்றால் தேவனுடைய சமூகத்தில் தான் "நித்திய பேரின்பம்" உள்ளதே! இந்த ஊற்றுக்கண்ணிலிருந்து மாத்திரமே, ஜீவநதிகள் நம்மூலமாய் புரண்டோடிடமுடியும்!!