இந்திய மதங்களும் கிறிஸ்தவமும்

இந்திய மதங்களும் கிறிஸ்தவமும்

ஏறக்குறைய கிறிஸ்துவுக்கு முன் 2500ஆம் ஆண்டளவில் ஜலப்பிரயத்தில் காப்பாற்றப்பட்ட நோவா குடும்பத்தினர் தேவனுடைய ஆசீர்வாதத்தின்படி இப்பூமியில் பலுகிப்பெருக ஆரம்பித்தனர். பின்பு 200 ஆண்டுகளுக்குள் நோவாவின் புத்திரருடைய ஆலோசனைப்படி பாபேல் கோபுரத்தை கட்ட ஆரம்பித்தனர். அங்கு இறைவனின் விருப்பப்படி பாஷைகள் பிறந்தன. இதனால் ஒரே குடும்பத்தினர் பூமயியின் நாலாபக்கமும் ஜாதி ஜாதியாக கோத்திரம் கோத்திரமாக குடும்பம் குடும்பமாக பிரிந்தனர். பாபேலுக்கு கிழக்கே, ஊர் என்னும் இடத்தில் சேமுடைய சந்ததியினர் குடீயிருப்பதையும், அங்கிருந்து ஆபிரகாம் தேவனால் விஷேச நோக்கத்திற்காக அழைக்கப்படுவதையும் நாம் காண்கின்றோம்.

இப்பிரதேசத்தையே வேதாகமம் மொசொப்பெத்தாமியா என்று அழைக்கின்றது. ( அப் 7:2) நாம் இதை சிந்துவெளி நாகரீகம் என்று அழைக்கின்றோம். வடக்கே யூப்பிரட்டீஸ், டைகிறிஸ் நதி தொடக்கம் தென் கிழக்கே கங்கை நதிவரை மக்கள் பரவி வாழ்ந்தனர். பாபேலில் ஆரம்பித்த விக்கிரக இயற்கைவழிபாடுகள் உலகமெங்கும் பரவியதோடு இந்தியாவிற்குள்ளும் நுழைந்தது. மொஹஞ்சதரோ, ஹரப்பா ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற புதைப்பொருள் ஆராட்சிகள் அக்கால மனிதனின் வாழ்க்கையை ஓரளவிற்கு புலப்படுத்துகின்றது. இங்கே கிடைக்கப்பெற்ற தொல்பொருள் சான்றுக8ளைத்தவிர வேறு இலக்கியங்கள் எதுவும் கிடைக்கவில்லை. மேலும் அங்கே காணப்பட்ட பொருள்ககளின்மேல் காணப்படும் எழுத்துக்கள் வாசிக்க முடியாததால் சமய நிலையை சரியாக அறிய முடியவில்லை. ஆனால் வேதாகமத்தில் ஜலரப்பிரளய பேழையில் இருந்து இறங்கிய நோவா, ஒரு பலிபீடம் கட்டி அதில் சுத்தமான மிருகங்களையும் சுத்தமான பறவைகளையும் பலியிட்டான் என்பதையும் (ஆதி 8:20) அதன்பின்பு ஏறக்குறை 350 அளவில் வாழ்ந்த ஆபிரகாம், பலிபீடம் கட்டி தேவனைத் தொழுதுகொண்டான் என்பதையும் (ஆதி 12:8) நாம் வாசிப்பதிலிருந்து..... அக்கால மக்கள் வேள்விப்பலியில் மிருகங்களையும் பறவைகளையும் ஒரே நேரத்தில் பலியிட்டு, இறைவனை வணங்கி வந்தனர் என்பதை அறிய முடிகின்றது.

இக்காலத்தில் இயற்கைக்கு பயந்த மக்கள் மீண்டும் ஒரு வெள்ளம் ஏற்பட்டு தங்களை அழித்துவிடாதபடி பல உபாய தந்திரங்களை தேடிக்கொண்டனர். பலர் மின்னல், காற்று, இடிமுழக்கம், நீர், மழை, நெரும்பு, ஆகியவற்றை பணிந்து வணங்க ஆரம்பித்தனர். இப்படியாக சுமேரிய சிந்து வெளி நாகரீகத்தில் வணங்கப்பட்ட இயற்கை தெய்வங்கள் ஏறக்குறைய முப்பத்து மூன்று ஆகும்.

விண்ணுக்குரிய தெய்வங்களாக வருணன், சூரியன், சவிதா ப+ஷன், ஆதித்தன், தியௌ, மித்திரன், விஷ்ணு, உனஷ ராத்திரி போன்ற தெய்வங்கள் கூறப்பட்டுள்ளன. மண்ணுக்குரிய தெய்வங்களாக பிருதுவி, அக்கினி, பிருகாஸ்பதி, சோமன் போன்றவையும் இடைவெளித் தெய்வங்களாக சிந்து, வியாட், சதுத்ரி, சரஸ்வதி போன்ற நதிகளும் இந்திரன், உருத்திரன், வாயு, பர்ஜன்யன், அப்பு எனப்படும் நீர்த் தெய்வங்களும் கூறப்பட்டுள்ளன.

சிந்துவெளியில் காணப்பட்ட தொல்பொருட்களை அடிப்படையாகக்கொண்டு இயற்கை வழிபாடும் உருவ வழிபாடும் நிலவியது எனலாம். ஆனால் மனித வாழ்வில் எக்காலத்திலும் பாலியல் பாவங்கள் நிலவியதை நாம் மறுக்க முடியாது. எகிப்தின் நாகரீக காலத்தில் சோதோம் கொமோரோவில் நிலவிய ஆகார திரட்சி செல்வம், நிர்விசாரம் இயயற்கைக்கு மாறான பாலியல் உறவுகள் இதனால் இறைவன் அவர்களை அக்கினியால் அழித்தல் இவை யாவும் ஏற்பட முக்கிய காரணம் மனிதன் இறைவனை தேடாமல் துன்மார்க்கத்தில் ஜீவித்ததேயாகும். மேலும் சிந்துவேளி நாகரீகத்தில் கோவில் வழிபாடு இருக்கவில்லை. ஆனால் இலட்சிணை ஒன்றில் ஒருவன் கையில் வாளேந்தி நிற்பது போலவும் அவனுக்கு அடியில் ஒரு பெண் முழங்கால்படியிட்டு இருப்பதுபொலவும் உருவகம் காணப்படுவதால் அக்காலப்பகுதியில் நரபலி கொடுக்கும் பழக்கம் இருந்தது எனலாம். இறைவன் ஆபிரகாமிடம் நீ நேசிக்கிற மகனை பலிசெலுத்து என்று கூறியபோது அவன் மறுக்காமல் தன் மகனை மோரியாமலைக்கு அழைத்துச் சென்று பலிகொடுக்க முயன்றது அக்காலத்தில் நரபலி கொடுக்கும் பழக்கம் இருந்தது என்பதை நமக்கு உறுதிப்படுத்துகின்றது. மேலும் சிந்துவெளி நாகரீகத்தில் கல்லின் மேல் எண்ணெய் ஊற்றி அபிஷேகிக்கும் பழக்கம் இருந்தது. யாக்கோபு ஆரானை நோக்கி ஓடும் வழியில் தேவதூதர்களை கனவில் கண்ட இடத்தில் ஒரு கல்லை நிறுத்தி எண்ணெய் ஊற்றி அபிஷேகித்ததை நாம் அறிவோம். இந்தியாவிற்குள் நுழைந்தவர்கள் அவ்வழக்கத்தை லிங்க வழிபாடாக தொடர்ந்து மேற்கொண்டனர்.

இந்தியாவின் மதங்களுக்கு முதல் நூல்களாக விளங்குபவை வேதங்களாகும். வேதம் என்ற சொல் வித் என்ற வினையடியாக பிறந்தவையாகும். வித் என்றால் அறிதல் அல்லது அறிவு எனப் பொருள்படும். எனவே வேதங்கள் அறிவு நூல்களாகும். இவை இறுக்கு, யசூர், சாமம், அதர்வனம் என்ற நான்கு வகைப்படும். இவற்றுள் காலத்தால் முற்பட்டது இறுக்கு வேதம் என்று கூறுகின்றனர். இறுக்கு கால மக்கள் பல்வேறு கடவுள்களை வழிபட்டாலும் சந்தர்ப்பத்திற்கேற்ப ஒரு கடவுளுக்கே முதன்மை கொடுப்பர். இந்திரனை வழிபடும்போது இந்திரனை பரம்பொருளாகவும் வருணனை வழிபடும்பொழுது வருணனை பரம்பொருளாகவும் கருதி வழிபடுவர். எச்சந்தர்ப்பத்தில் எக்கடவுளை வணங்குகின்றார்களோ அக்கடவுளையே உயர்ந்த கடவுளாக கருதி வழிபடும் இயல்புடையவர்கள். சந்தர்ப்பத்தைப் பொருத்து வணங்கும் கடவுளுக்கு முதன்மை கொடுப்பதால் சரியான ஒரு கடவுளை யார் என்று அறியாமல் சந்தர்ப்பவாதிகளாக பற்பல தெய்வங்களை வணங்கிப் போற்றுகின்றனர். இப்படியான ஒரு சூழ்நிலையிலேயே ஆபிரகாம் இருந்தான். தேவன் அவனோடும் அவன் சந்ததியாரோடும் இடைபட்டதால் அவர்கள் மெய்தேவ வணக்கத்தில் ஊறி திழைத்து வந்தனர்.
தற்காலத்தில் நாம் இந்தியாவிலுள்ள இந்துக்களை கண்ணோக்கிப் பார்க்கும்போது வட இந்தியாவிலுள்ளவர்கள் விஷ்ணுவை பரம்பொருளாகவும் தென் இந்தியாவிலுள்ளவர்கள் சிவனை பரம்பொருளாகவும் இன்னும் சிலர் விநாயகரை பரம்பொருளாகவும்கொண்டு அத் தெய்வங்களை வணங்குகின்றனர். தென் நாட்டில் இந்துக்களின் கடவுளாக கொள்ளப்படுபவர்கள் சிவன், சக்தி, விஷ்ணு, குமரன், விநாயகன், பிரமன், ஐயப்பன் ஆகிய ஏழுபேராவர். இவர்களில் பிரமனுக்கு தனிச் சமயம் இல்லை. மிகுதி குட்டித் தெய்வங்கள் அனைத்தும் ஆறு கடவுளுக்குள் அடங்கி விடும். இதனால் முறையே, சைவம், சாத்தம், வைணவம், கௌமாரம், காணபத்தியம், சௌரம், ஆகிய ஆறு மதங்கள் இவர்களுக்குக் கிடைக்கின்றது. இப்படியாக தமிழகத்தில் எழுந்த பக்தி இயக்கமே இவ் ஆறுவகை சமயங்களாகும். மேலும் புராணங்களின்படி சிவனுக்கும் சக்திக்கும் பிறந்த பிள்ளைகளே குமரனும் விநாயகனும் ஆவார். அவ்வண்ணம் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த பிள்ளைகளே பிரமனும் ஐயப்பனும் ஆவார். எனவே இவை ஒரு குடும்பத்து தென்நாட்டு தெய்வங்கள் எனலாம். இவற்றையே சேர சோழ பாண்டிய நாட்டினரும் இலங்கையில் வாழ்ந்த மக்களும் வெளிநாடுகளுக்கு கடல்கடந்து சென்றோரும் பல நூற்றாண்டுகளாக வணங்கி வருகின்றனர்.
இந்து என்ற சொல் ஒரு சமயத்தினரைக் குறிக்கும் சொல் என பலர் எண்ணுகின்றனர். எபிரெயர்களின் வேதமான தல்மூட்டில் அதாவது பழைய ஏற்பாட்டில் எஸ்தர் புத்தகத்தில் ஹொடு (HODUW) என்ற சொல் இந்தியாவையே அதாவது இந்தியாவில் வாழும் மக்களையே குறிக்க பயன்பட்டுள்ளது. (எஸ்தர் 1:1, 8:9). 'இந்து தேசம் முதல் எத்தியோப்பிய தேசம் வரைக்கும் உள்ள 127 நாடுகளை அரசாண்ட’ என்ற வசனத்தின் அடிப்படையில் இந்து என்பது ஒரு நாட்டின் பெயரே ஆகும். எனவே இந்துக்கள் என்பது இஸ்ரவேலரை தூரத்தில் நின்று பின்சென்ற அல்லது இஸ்ரவேலரோடு தூரத்தில் வளர்ந்த ஒரு நாட்டினரே ஆவர்.
இஸ்ரவேல் நாட்டில் எருசலேம் ஆலயத்தில் தூய தெய்வீக மணம் கமழ்ந்துகொண்டிருந்த அதே நேரத்தில் சில மைல் தூரத்தில் இருந்த சமாரியாவில் விக்கிரக கன்றுக்குட்டி வணக்கம் நாற்றமடித்துக்கொண்டிருந்தது. ஆனால் அந் நாற்றம் இந்தியாவில் சிந்துவெளி சுமேரிய நாகரீகம் தொடக்கம் இன்றைய விஞ்ஞான நாகரீகம் வரை தொடர்ந்துகொண்டிருப்பதை நாம் காண்கிறோம்.

ஆரியர் இந்தியாவிற்குள் வந்தபோதுதான் வேதங்கள் நான்கும் இந்தியாவிற்குள் வந்ததாக நாம் கருதமுடியாது. இந்தியாவிற்குள் நுழையாத ஆரியர் இன்னும் ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் இருக்கின்றனர். ஆனால் அவர்களிடத்தில் இந்த நான்கு வேதங்களும் இல்லை. எனவே இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர் உண்மையான ஐரோப்பியர் அல்ல. ஆசீரிய பாபிலேரானிய யூத இனங்களின் வாரிசுகளே இன்று வட இந்தியாவில் காணும் மக்கள் கூட்டமாகும். கிறிஸ்துவுக்கு முன் 725ல் அசீரியர் இஸ்ரவேலரை சிறைபிடித்துச் சென்றனர். கிறிஸ்துவுக்கு முன் 605ல் பாபிலோனியர் யAதாவை சிறைபிடித்துச் சென்றனர். எனவே அன்று சிதறிய யூத மக்களின் சமய வழிபாடுகளை மருவி இந்துக்களின் சமயமாக பரிணமித்தது. ஆதியில் கோவில் கட்டும் வழக்கம் இருக்கவில்லை. மோசேக்கூடாக தேவனால் கொடுக்கப்பட்ட ஆலய கட்டுமானமே இந்தியாவில் கோவில் வடிவம் பெற்றது. இதேவேளையில் இஸ்ரவேலரின் வேள்வி பலியை வெறுத்த சமண பௌத்த மதங்களும் ஒரு பக்கத்தில் வேர்விட்டு வளர்ந்தன என்பதை மறுப்பதற்கில்லை. உண்மையாக கிறிஸ்து சிலுவையில் தியாகப் பலியாக வேள்வியாக்கப் பட்டார். அவரின் வேள்வியினாலேயே நாம் இன்று மீட்கப்பட்டு அவரின் பிள்ளைகளாக மாற்றப்பட்டுள்ளோம்.

இஸ்ரவேலரின் சமய கோட்பாடுகளே இந்திய மதங்களின் அடிப்படைத் தத்துவங்களாக இருக்கின்றன என்பதை கீழ்வரும் பட்டியல் உறுதிப்படுத்துகின்றது.
1. ஸ்தல மகிமை – ஆண்டவர் இவ்விடத்தில் இருக்கின்றார் (ஆதி 28:17).
2. ஸ்தல விருட்சம் - மரத்தின் கீழ் நாட்டினர் (யோசுவா 24:26-27)
3. மூர்த்தி மகிமை - இந்தக்கல்லே கோவில் (ஆதி 28:22).
4. அபிஷேகம் - எண்ணை வார்த்தல் (ஆதி 35:14)
5. வழிபாடு – பானபலி வார்த்தார் (ஆதி 35:14).
6. காணிக்கை – தசமபாகம் செலுத்துவதாக நேர்த்தி (ஆதி 28:22)
7. பலிபீடம் - பலிபீடத்தைக் கட்டினார் (ஆதி 35:7)
8. வாகனம் - கன்றுக்குட்டி (1ராஜா 12:29)

இப்படியாக சிந்துவெளி நாகரீகத்தில் நிலவிய கோட்பாடுகள் தரைவழியாகவும் கடல்வழியாகவும் இந்தியாவிற்குள் நுழைந்து இன்றுவரை படிப்படையாக வளர்ந்துள்ளதை நாம் காணலாம். இந்திய மாபெரும் எழுத்தாளர்களான வால்மீகியும் வியாசரும் இறைத்தத்துவங்களை விளக்க முற்படுகின்றனர். இராமாயணத்தை இயற்றிய வால்மீகி இராம பிராணை விஷ்ணுவாக காண்பிக்கின்றார். அதேவண்ணம் மகாபாரதத்தை இயற்றிய வியாசகரும் கண்ணபிரானை விஷ்ணுவாக காண்பிக்க முயற்சிக்கின்றார். வியாசர் பகவத் கீதையில் இறைவனை புருஷோத்மனாக காட்ட முற்படுகின்றார் (15:17). இறைவன் சுத்த சைத்தனியமாக நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்றார் ப+லோகம் புவர்லோகம் சுவர்லோகம் ஆகிய மூவுலகும் அவருடைய பராசக்தியில் அடங்கிக் கிடக்கின்றன. அவரே முழு முதற் கடவுளாகிய பரா பிரம்மம். அவரே மூவுலகினைத் தாங்கி;க் கொண்டிருக்கின்றார் என்றும் கடவுடன் சங்கமிக்கும் நதி இறுதியில் ஆற்றின் தன்மை அகன்று கடல் நீராவதுபோல் அமிர்த சொருபமாகிய பரமாத்மாவுடன் ஆன்மா போய்க் கலந்து பரஞான சுடராக சத் சித் ஆனந்த சொருபத்தில் கலந்து முக்தி நிலை அடைவது இறை நிலை என்றும் ஜீவாத்மாக்கள் எல்லாம் ஈஸ்வரனில் அடங்கியிருக்கின்றார்கள் என்றும் நிர்க்குண நிர்விகாரமாயிருப்பவர் பரம்ம பிரம்மமாகிய புருஷோத்மன் என்றும் அவர் கண்ணப்பிரான் ஆகிய ஸ்ரீ மத் கிருஷ்ணரே என்றும் காட்ட முற்படுகின்றார். (15:18).

தசாவதாரம் என்று சொல்லப்படும் பத்து அவதாரங்களிலும் அவதாரப் புருஷராக விளங்கியவர் முழு முதற்கடவுளாகிய மகா விஷ்ணுவே என்று நிரூபிக்க இந்த சமயம் முற்படுகின்றது. ஆனால் அவதார கொள்கைகளில் வேதாகமம் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளாத படியால் இச்செயற்பாடுகள் கிறிஸ்;தவ பார்வையில் பொய்யாகின்றது. 'ஒரேமுறை பிறப்பதும் ஒரேமுறையில் மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்புக்காக தேவனுக்கு முன் நிற்பதும்" மனிதனுக்கு நியமிக்கப்பட்டிருக்கின்ற படியால் (எபிரெயர் 9:27) இப்போதனைகள் பொய்யும் ஏமாற்றும் என்று புலனாகின்றது.

சிந்துவெளியில் தோன்றிய, பின்பு தென் நாட்டை நோக்கி நகர்ந்த தென் இந்தியர் தங்கள் சரித்திரத்தை எழுதிவைக்கவில்லை. ஆனாலும் தங்களைப் பெறுமையாகக் கூற.... கல்தோன்றி மண்தோன்றா காலத்தில் பிறந்த மூத்தக் குடி என்று தங்களைக் கூறிக்கொள்வார்கள். மேலும் 'ஆதியும் அந்தமுமில்லாத காலம்" என்றும் பொதுவாகக் கூறிக்கொள்வார்கள். வரலாறு இல்லாதபடியால் இப்படிச்சொல்லி சமாளிக்கலாம். ஆனால் வேதாகமத்தில் வரலாறு மிகச் சரியாக இருக்கின்ற படியால் இவர்களின் கூற்றுக்கள் அனைத்தும் படுபொய் என்று எம்மால் (புரிந்துகொள்ள முடியும்) உறுதியாகக் கூறமுடியும்.

உயிர்கள் அனைத்தும் மறுபடியும் மறுபடியும் பிறந்தே முக்தி நிலை அடைவதாக இந்திய மதங்கள் கூறுகின்றன. அதாவது நிலத்தில் வளரும் புல் தொடக்கம் பிரம்மாவரை மறுபடியும் மறுபடியும் பிறக்கவேண்டுமாம். ஏனென்றால் பாவமாகிய முக்குணங்கள் எல்லா உயிர்களிலும் இருப்பதால் அவற்றை முற்றும் முழுதாக களைந்துவிட இப்பிறப்பு அவசியமாம். இப்படியாக படிப்படியாக உயர்பதவி என்றுச் சொல்லப்படுகின்ற 'பிகிருதிலயம்" இருக்கின்றதாம். 'சத்வம், ரஜாம், தாமசம்" ஆகிய இக்குணங்கள் அகல பல பிறப்பும், கோடிக்கணக்கான வருடங்களும் தேவை என்று இந்துக்கள் நம்புகின்றனர். ஆனால் கிறிஸ்தவத்திலோ இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் கழுவும் என்றும் அப்படிப்பட்ட மனிதன் ஒருசில வருடங்களில் வசனத்தில் தேறி கனிகொடுத்து தெய்வீக சாயலை அடைவான் என்றும் வேதாகமம் கூறுகின்றது. தேவனைப்போல அகாப்பே அன்பில் வளர ஒரு சில வருடங்கள் போதுமானால் கோடிக்கணக்கான வருடங்களாகிய வியாசரின் கருத்து படு பிழையானதாகும்.

இந்திய மதங்கள் இன்று படிப்படியாக வளர்ந்தவண்ணம் உள்ளன. 500 ஆண்டுகளுக்கு முன் குமரக் கடவுள் சின்ன தெய்வமாகவே கருதப்பட்டார். இதனால் அருணகிரி நாதர் அறுமுகம் சிறுவன் என்ற எண்ணத்தை நீக்க குமரக் கடவுளும் அரி, அரண் ஆகியோருக்கு ஈடானவனே என்பதை சுட்டிக்காட்டி, தமிழ்நாடெங்கும் முருகன் கோவிலைக் கட்ட முற்பட்டார். இவருடைய திருப்புகழ் பாடல்களால் ஆலயங்கள் சிறப்புப் பெற்றனவாம். திருப்புகழ் பா வகையை புதிய முறையில் அமைத்துக் காட்டியவர் அருணகிரி நாதரே. அதேபோல் 185 ஆண்டுகளுக்கு முன் உடுவில் கிறிஸ்தவ விடுதி பாடசாலையில் தங்கிப் படித்த ஆறுமுகம் பின்பு கிறிஸ்தவ பாடசாலைகளுக்கு எதிராக இந்துப் பாடசாலைகளை அமைத்தும் கிறிஸ்தவ ஞான உபதேசத்தைப் போன்று சைவ வினாவிடையை எழுதியும் கிறிஸ்தவ முறையில் பிரசங்கம் பண்ணியும் புராணங்களை அச்சிட்டும் சைவ வளர்த்ததை நாம் அறிவோம். ஆங்கிலேயர் காலத்தில் படிப்புக்காகவும் வேலைக்காகவும் உணவிற்காகவும் மதமாறிய மக்கள் இந்தியா இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் மீண்டும் தங்கள் பழைய மதங்களுக்கே திரும்பினர். இவர்களே இன்று நாம் காணும் இந்துக்கள்.

இப்படியாக இந்து மதம் இன்றுவரை வளர்ந்துகொண்டே வந்துள்ளன. சின்ன தெய்வங்கள் பெரிய தெய்வங்களாக மாறுகின்றன. ஆனால் கிறிஸ்தவ வேதாகமத்தைக் காணும்போது முழு உலக வரலாறும் ஏறக்குறை 1500 ஆண்டுகளுக்குள் வேதாகமத்தில் எழுதப்பட்டு பூர்த்தியடைந்து விட்டது. கிறிஸ்துவின் காலத்திலேயே கிறிஸ்தவம் பூரணமடைந்தது. இன்று கிறிஸ்தவ கோட்பாடுகள் வளராமல் கடந்த 1950 வருடங்களாக சபை வளர்ந்துகொண்டுவருகின்றது. எனவே இறைவன் 1950 ஆண்டுகளாக நேரடியாகத் தோன்றாமலேயே ஆவியானவருக்கூடாகவும் பரிசுத்த சீஷர்களுக்கு ஊடாகவும்வளரச் செய்ததன் மூலம் அது ஜீவாம்சம் உள்ள மார்க்கம் என்பதை எமக்கு உணரச் செய்கின்றது.
இந்து மதத்தில் இறைவன் புருஷோத்மனாக ஒளிமயமாக துலங்குவதாகக் கூறினாலும் அதன் இறுதி நிலை மகாவிஷ்ணுவின் வடிவமாக இருப்பதால் அவ்வொளிக்குள் மகா விஷ்ணுவின் கருமை நிறம் காணப்படுகின்றது. வேதாகமத்திலோ தேவன் ஒளியாக இருக்கின்றார். அவரில் எவ்வளவேனும் இருள் இல்லை. (1யோவான் 1:9) என்றும் நான் உலகத்திற்கு ஒளியாக இருக்கின்றேன் என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான் (யோவான் 8:12, 9:5) என்றும் அவரில் ஒளிமயம் பல சந்தர்ப்பங்களில் விபரிக்கப்பட்டுள்ளது. இந்த ஒளிமயத்தில் இருள், கருமை சிறிதளவேனும் காணப்படாதது கிறிஸ்தவத்தில் இருக்கும் மேன்மையும் மகத்துவமுமாகும்.

பொதுவாகக் கூறப்போனால், இந்திய மதங்கள் பலதெய்வங்களை வணங்கும் பொலித்திச கொள்கையைப் பின்பற்றும் மதமாகவும் இயற்கையின் எல்லாவற்றையும் வணங்கும் பன்திச கொள்கையுள்ள மதமாகவும் அளவற்ற பரம்பொருளை மனித அறிவால் அறியாமல் அதனுடன் கலக்கும் நொக்ஸடிச கொள்கையைப் பின்பற்றும் மதமாகவும் இருப்பதைக் காணலாம். இக்கொள்கைகள் அனைத்தும் இறைவனை இயற்கையோடு இணைத்துக்காட்டி தாறுமாறு ஆக்கி இயற்கைக்கு ஒத்த வடிவிலேயே இறைவன் இருக்கின்றான் என்ற வரைவிலக்கணம் வகுத்து மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றது. ஒரு செயற்கைப் பொருளை நாம் சுட்டிக்காட்டி அதை உண்டாக்கிய சிருஷ்டிகனின் வடிவத்தை ஒருபோதும் அறிய முடியாது. உதாரணமாக, விஞ்ஞானியாகிய எடிசன் கண்டுபிடித்த மின்சாரக் குழிழை வைத்துக்கொண்டு எடிசனும் இப்படித்தான் இருப்பார் என்று கூறமுடியுமா. முடியாது. அதேபோல் இயற்கையையும் அதன் தொழிற்பாட்டையும் வைத்துக்கொண்டு அதன் சிருஷ்டிகரை வர்ணிக்க முடியாது. இறைவன் இவ்வண்ணம் தான் இருப்பார் என்பது பயங்கரமான படு முட்டாள்தனமாகும்.

உலகில் வாழும் பறவை இனங்களைப் பார்க்கும்போது சில பறவைகள் ஒரு துணையுடனே வாழ்ந்து மடிந்துபோகின்றன. ஐந்தறிவு படைத்த இயற்கை இனங்களே இப்படித் தங்கள் கற்பைப் பாதுகாக்கும்போது இந்து மதத்தில் இறைவன் எனப் போற்றப்படும் தெய்வங்கள் திருமணம் செய்தும் போதாக்குறைக்கு இருமனைவிகளை வைத்துக்கொண்டும் சுவாமிகளாக வலம்வருவது உண்மையிலேயே இவைகள் தெய்வங்கள் அல்ல. அவை நம்மைப்போல் பூமியில் வாழ்ந்த பாவ மனிதர்கள் என்பதையே எமக்கு அறியத் தருகின்றன. எனவே மானிட தெய்வங்கள் உண்மையிலேயே தெய்வங்கள் ஆகா.

நாம் உண்மையான தெய்வத்தைக் காண குறிப்பிடத்தக்க இலட்சணங்கள் இருக்கின்றனவா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

முதலாவதாக இவ்வுலகையும் அண்ட சராசரங்களையும் சிருஷ்டிக்கும் சர்வ வல்லமை காணப்படுகின்றதா? கிறிஸ்தவத்திலோ ஆதியில் தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் என்றும் (ஆதி 1:1) தண்ணீரை தமது கைப்பிடியால் அளந்து வானங்களை சாண் அளவாய் பிரமாணித்து பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கி பர்வதங்களை துலாக்கோலாவும் மலைகளை தராசாலும் நிறுத்தவர் யார்? என்றும் (ஏசாயா 40:12) நட்சத்திரங்களை இலக்கத் திட்டமாய் புறப்படப் பண்ணி அவைகளை பேர்பேராய் அழைக்கிறவர் என்றும் (ஏசாயா 40:26) எமது தேவனைக் குறித்துக் கூறப்படுகின்றது. ஆனால் இந்து மார்க்கத்தில் இப்படியான தெளிவான சம்பவங்கள் எதுவுமே இல்லாதபடியால் அங்கே சர்வ வல்லமை காணமுடியவில்லை. எனவே அம் மார்க்கத்தை வல்லமை நிறைந்ததாக கணிப்பிட முடியாது.

இரண்டாவதாக, சர்வவியாபகம் காணப்பட வேண்டும். பூமி முழுவதும் நிறைந்து நிற்கும் நிலை. நான் வானத்திற்கு ஏறினாலும் நீர் அங்கே நிற்கின்றீர். நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும் நீர் அங்கேயும் இருக்கின்றீர் (சங் 139:8) இந்த தராதரம் இஸ்ரவேலின் தேவனாகிய யேகோவாவிற்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிற்கும் பரிசுத்த ஆவியானவருக்கும் மாத்திரமே காணப்படுகின்றது. வேறு எந்த தெய்வங்களிலும் இந்த தாராதரம் காணப்படவில்லை.

மூன்றாவதாக, சர்வ ஞானம் காணப்பட வேண்டும். பூமியிலுள்ள பொருட்கள் முழுவதையும் அவர் உண்டாக்கினார் (சங் 104:24) பூமியையும் வானத்தையும் அவர் உண்டாக்கினார் (எரே 10:12-13). அரசியலில் அவருடைய செயல்பாடு காணப்படுகின்றது. (தானியேல் 2:20-21, 2:44) 2500 ஆண்டுகளுக்குட்பட்ட உலகின் முழு அரசியலையும் கனவில் ஒரு சிலை வடிவத்திற்குள் வெளிப்படுத்தக் கூடிய ஞானமுள்ளவர் (தானியேல் 2:44) கிறிஸ்துவுக்கு ஞானம் அறிவு ஆகிய பொக்கிஷங்கள் அடங்கியிருக்க காணப்படுகின்றது. (கொலோ 2:2). இப்படி சர்வ ஞானமுள்ள எவரையும் நாம் எங்கும் காணமுடியாது. வேதாகமத்தில் மாத்திரமே அவர் காணப்படுகிறார்.
நான்காவதாக, நித்திய காலமாக நிலைத்திருக்கும் நித்திய இலட்சணம் காணப்பட வேண்டும். தேவன் ஒருவர் மாத்திரமே ஆதிக்காலம் தொடக்கம் இன்றுவரை கிரியை செய்கின்றவராக காணப்படுகின்றார். அல்பாவும் ஒமேகாவும் ஆதியும் அந்தமும் முந்தினவரும் பிந்தினவரும் மரணமடைந்தாலும் உயிர்த்தெழும்பும் வல்லமையுள்ளவராகவும் காணப்படும் தேவன் கிறிஸ்தவத்திலே காணப்படுகின்றார். இப்படியாக தெய்வீக இலட்சணங்களை வர்ணித்துக் கொண்டே போகலாம். பரிசுத்தம், சுதந்திரம், உண்மைத்துவம், நேசம், இரக்கம், உருக்கம், நீதி, நியாயம், நேர்மை இவை அனைத்தும் இந்திய தெய்வங்களில் எம்மால் காணமுடியாது. கிறிஸ்தவத்தில் மாத்திரமே இவற்றை பரிபூரணமாக காணமுடியும். எனவே கிறிஸ்தவமே மெய்யான மார்க்கமாகின்றது.

இந்திய மதங்களிலே தெய்வங்களின் பெயர்களை மனிதர்களே வைத்தனர். வேதாகமத்திலோ இறைவனே தமது பெயரை எமக்குக் கூறுகின்றார். ஆரம்பத்தில் ஏலோகீம் என்ற பன்மை தொகை பெயரில் வெளிப்படுத்துகின்றார். ஆதியிலே ஏலோகீம் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் (ஆதி 1:1) என்று தமது பெயருக்கூடாகவே தம்மை வெளிப்படுத்துகின்றார். பின்பு மனிதனை சிருஷ்டிக்கும் வேளையில் ஏலோகீமாகிய யேகோவா என்று தம்மைக் காண்பிக்க முற்பட்டு தேவனாகிய கர்த்தராக எமக்கு ஜீவ சுவாசத்தை ஊதி ஜீவாத்மாவாக எம்மை நிலைநிறுத்தினார். ஆதாமும் ஏவாளும் வேண்டுமென்று தவறு செய்த போதிலும் அவர் அவர்களை தேடிவந்து அவர்களை இரட்சிக்க அவரது ஒரேபேறான குமாரனை அனுப்ப முற்பட்டு ஸ்திரீயின் வித்தை வாக்குப் பண்ணுகின்றார். உண்மையிலேயே யேகோவா என்றால் இரக்கமும் கிருபையும் நீடிய சாந்தமும் மகா தயையும் சத்தியமுள்ள தேவன் என்றும் ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர் என்றும் அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர் என்றும் பொருளாகும். (யாத்திராகமம் 34:5-7). கெம்பீர சத்தத்தை அறியும் மக்கள் பாக்கியமுள்ளவர்கள். யேகோவாவே அவர்கள் உம்முடைய முகத்தின் வெளிச்சத்திலே நடப்பார்கள். அவர்கள் உம்முடைய பேரிலே நாடோறும் களிகூர்ந்து உம்முடைய நீதியால் உயர்ந்திருப்பார்கள். (சங்கீதம் 89:15-16) என்றும் அவருடைய பெயருக்கூடாகவே அவருடைய குணாதிசய தன்மையை எமக்கு வெளிப்படுத்துகின்றார்.
அடுத்து வானத்தையும் ப+மியையும் சொந்தமாகக் கொண்ட உன்னதமான தேவனாகிய கர்த்தர் என்ற பெயரோடு தம்மை வெளிப்படுத்துகின்றார். எல்யோன் என்பது என்றென்றும் ஜீவித்திருக்கின்ற தமது விருப்பப்படியே வானத்தின் சேனைகளையும் பூமியின் குடிகளையும் நடத்துகின்ற அதி உன்னதமானவரைக் குறிக்கின்றது. இவருக்கு விரோதமாகத்தான் அந்திக் கிறிஸ்து இறுதியில் எழும்புவான். ஆனால் மூன்றரை வருட இறுதியில் அவன் தோற்கடிக்கப்பட்டு சகல ராஜ்யங்களும் ராஜரீகமும் ஆளுகையும் மகத்துவமும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்களுக்குக் கொடுக்கப்படும். அவருடைய நித்திய ராஜ்யத்தில் சகல கர்த்தத்துவங்களும் அவரைச் சேவித்து கீழ்ப்பட்டிருக்கும். (ஆதி 14:23, தானியேல் 7:27-28) இப்படியாக அவருடைய அதி உயர் தராதரம் விளங்குகின்றது. 


அடுத்து தேவன் ஆதியாகமத்தில் யேகோவாயீரேயாக காட்சிக் கொடுத்து ஆபிரகாமுக்குத் தேவையான பலிபொருளைச் சந்திக்கின்றார். ஏற்ற நேரத்தில் கர்த்தருடைய பர்வத்தத்தில் பார்த்துக்கொள்ளப்படும் (ஆதி 22:14) அல்லது ஈவாக அருளப்படும் என்பதே அவர் பெயர் நமக்கு விளக்குகின்றது,

இறுதியாக இயேசு என்னும் பெயரை புதிய ஏற்பாட்டில் காண்கிறோம். தெயோஸ், லோகோஸாக திகழ்ந்த வார்த்தையை எமக்குக் கொடுத்தார். அவர் சிலுவையில் பாவத்தைப் போக்கும் பலியாக மரணமடைந்து எம்மை இரட்சிக்க (மத் 1:21) தமது இரத்தத்தை சிந்தினார். இப்படி தேவன் பல பெயர்களுக்கூடாக தம்மை வெளிப்படுத்தி இறுதியில் அவர் தாமே மனுகுலத்திற்குரிய முக்தி வழியை ஏற்படுத்தி இருக்கின்றார். அவருக்கூடாக நாம் இரட்சிக்கப்பட்டு தேவனுடைய பிள்ளைகளாக மாற்றப்படுகின்றோம். இந்திய மார்க்கங்களின் ஊடாக அல்ல. கிறிஸ்தவத்திற்கூடாகவே இரட்சிப்பு இருக்கின்றது என்பதை அறிவு பூர்வமாக உணர்ந்து அந்த இரட்சிப்பை ஏற்படுத்திய தேவாதி தேவனை நாம் மெய்யாகவே வாயார வாழ்த்திப் புகழலாம்.

நன்றி :இ. வஷ்னீ.