துர்உபதேசங்களின் தன்மைகள்

தேவசத்தியத்தை தலைகீழாக மாற்றும் பயங்கரமான ஒரு காலகட்டத்தில் கிறிஸ்தவர்கள் வாழ்கிறார்கள்.  அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து மற்ற உலக நாடுகளிலிருந்தும் வேகமாய் பரவிவரும் துர்வசனக் கூட்டங்களை ஒவ்வொரு கிறிஸ்தவனும் தெரிந்து கொள்ளாது போனால் ஆபத்து பயங்கரமாக இருக்கும். இக்கடைசி நாட்களில் சபை மக்கள் தங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டு விழிப்பாயிருப்பது திருச்சபைக்கு மிக நல்லது. 

துர்உபதேச இயக்கங்கள் மத அடிப்படை இயக்கங்கள். அதிலும் கிறிஸ்தவர்களோ சம்பந்தப்பட்டு வேதத்திற்கும் தேவ நியமங்களுக்கும் எதிராய்பேசும் இயக்கங்கள். வேதத்தை தவறாகக் கூறி கிறிஸ்தவர்களின் விசுவாசத்தைக் குழப்புவதால் விசுவாசிகள் இவற்றுக்கு விலக வேண்டியது அவசியமாகின்றது “வேறு சுவிசேஷத்தை“ சொல்லும் இவர்களின் தன்மைகள் எவைகள்? இந்தப் புகழ்வாய்ந்த போலி இயக்கங்களின் வெளிப்பாடுகள் எவைகள்? என்பதை விபரமாய் அறிந்து கொள்வது நலமாகும். 

வேறே சுவிசேஷம் (Different Gospel)
துர்வசனக் கூட்டத்தார் பொதுவாகவே அடிப்படை வசனத்திலிருந்து விலகி வேதத்தை பிரசங்கிப்பவர்கள். இவர்களின் செய்திகளில் “வேறே சுவிஷேசம் காணப்படுகின்றது. இதைப் பவுல் கலாத்தியருக்கு எழுதும்போது கூறியிருக்கிறார். 

“உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்கு திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்; வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். (கலா. 1: 6-8)

பவுல் கலாத்தியருக்கு எழுதின கடிதம் கி.பி. 55 இற்கும் 56 இற்கும் இடையேயுள்ள ஆண்டுகளில் எழுதப்பட்டது. அப்படியானால் முதல் நூற்றாண்டின் மையப்பகுதியிலேயே வேறொரு சுவிசேஷம் சபைக்குள் வந்துவிட்டது. அப்போஸ்தலரால் சொல்லப்பட்ட சுவிசேஷமேயன்றி வேறே சுவிசேஷம் இல்லை. அப்படி ஒரு சுவிசேஷத்தை வானத்திலிருந்து ஒரு தூதன் வந்து சொன்னாலும் அவன் சபிக்கப்பட்டவன் என்கிறார் பவுல். 

துர்உபதேசக்கூட்டம் மக்களைக் களங்கப்படுத்தி அவர்கள் மனதைக் கெடுத்தும் குழப்பியும் தங்கள் பக்கம் இழுக்கும்போது கிருபையை விட்டு விலகுகிறவர்கள் அந்தக் கூட்டங்களோடு சேர்ந்து விடுகின்றனர். எனவே பவுல் “நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். 30 உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.“ (அப். 20;29-30) அவர்கள் சீஷரகளை இழுத்துக் கொள்ள மாறுபாடானவைகளை போதிப்பார்கள். என்ன போதிப்பார்கள் வேறே சுவிசேஷத்தைப் போதிப்பார்கள். 

சுவிசேஷம் என்பது எது? தேவகுமாரனான இயேசுக்கிறிஸ்துவின் கன்னிப்பிறப்பு, அவரது அற்புதமான ஊழியம், அவரது சிலுவை மரணம் அவரின் உண்மையான உயிர்தெழுதல், அவரின் இரண்டாம் வருகை அவரோடு பரலோகத்தில் நித்தியவாழ்வு இவைகள் அனைத்தும் அடங்கியதே சுவிசேஷம் என்றழைக்கப்படுகிறது. ஆனால் இந்த வேறே சுவிசேஷம் என்பது என்ன? சரியான சுவிசேஷத்தில் வரும் மூல உபதேசங்களை மாற்றி, திரி்த்து வேறுபடுத்தி இயேசுவோடு சம்பந்தப்படுத்திக் கூறுவதே வேறே சுவிசேஷம்.


இன்றும் உலகில் கன்னிப்பிறப்பை மறுதலிக்கும் கிறிஸ்தவர்களும் உயிர்தெழுதலை விசுவசியாத கல்விமான்களும் இருக்கிறார்கள்இவர்களெல்லாம் அந்த வேறே சுவிசேஷேத்திற்கு செவி சாய்ப்பவர்கள். கன்னிப்பிறப்பே சுவிசேஷேத்தின் வேர். இதையும் அடியோடு மறுதலிப்பவர்கள். வேறே சுவிசேஷக்  கூட்டத்தார். அவர்களின் துர்உபதேச இயக்கங்களும். இதை வெகுவாய் மறுதலிக்கின்றன.  

2. வேறே இயேசு (Different Jesus)
பவுல் கொரிந்தியருக்கு எழுதிய .இரண்டாம் கடிதத்தில் இவைகளைத் தெளிவாக்குகின்றார்.“எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப்  பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே.“ (2 (கொரி. 11.4)

பவுல் கொரிந்து சபைக்கு எழுதிய இரண்டாம் கடிதத்தில், நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசு, நீங்கள் பெற்றிராத வேறே ஆவி, நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வெறொரு சுவிசேஷம் என்று எழுதியிருக்கிறார். வேறே இயேசு, வேறே ஆவி, வேறே சுவிசேஷம் ஆகிய இம்மூன்றும் துர்உபதேசக் கூட்டத்தினரால் போதிக்கப்படுபவை. 

வேறே இயேசு என்றால் வேதம் கூறும் இயேவை வேதத்தின்படி கூறாது வேறுவிதமாய் கூறுவதாகும். இயேசு வந்த நோக்கம் முழுவதையும் மாற்றி வேறுவிதமாய் போதிப்பதாகும். இயேசு செய்த ஊழியத்தை வேறு விதமாய் சித்தரிப்பதாகும். 

யெகோவா சாட்சி கூட்டத்தார் (Jehovah's Witnesses) இயேசு தேவனுடைய நித்திய குமாரனல்ல. அவர் தேவனுடைய முதல் சிருஷ்டி பிரதான தூதனான  மிகாவேலைப் போல் இயேசுவும் ஒருவர் என்கிறனர்
மோமர்மன் சபையார் (Mormon Church) இயேசுவை தெய்வீகமானவராக ஏற்றுக் கொள்வதில்லை. பல கடவுள்களி்ல் இருவரும் ஒருவர் வானலோகத் தகப்பனுக்கும் வானலோகத் தாய்க்கும் பாலுறவு முறையில் உற்பவித்துப் பிறந்த ஆவியின் முதல் குழந்தை (First Sprit Child) இயேசு லுசிபருக்கு ஆவியின் சகோதரன் (Sprit Brother of Lucifer) என்கிறனர். 

இப்படி இயேசுவை வேறுவிதங்களில் சித்தரித்து அவரை முழுவதும் மாறுபட்ட இயேசுவாக கூறுவது இவர்களின் கொள்கைகளாகும். பொதுவாக அனைத்து துர்உபதேசக் இயக்கங்களிலும் இவ்விதக் கொள்கைகள் இருக்கின்றன. அவை இயக்கங்களுக்கு இயக்கம் வேறுபட்டும் இருக்கின்றன. 

3. வேறே ஆவி. (Different Spirit)
பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள். 2 தேவஆவியை நீங்கள் எதினால் அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது. 3 மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திகிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.“ என்று யோவான் தனது முதல் நிருபத்தில் மூல அறிவிப்பைக் கூறியிருக்கின்றார். ( 1 யோவான் 4:1-3)

இயேசுவை அறிக்கை பண்ணாத வேறே ஆவிகள் உலகத்தில் கிரியை செய்கின்றன. அவைகள் அந்திக் கிறிஸ்துவின் ஆவிகள் என்றே அழைக்கப்படுகின்றன. இவ்வித ஆவிகள் இயேசு கிறிஸ்துவுக்கு விரோதமாக செயல்படுகி்ன்றன. அந்திக்கிறிஸ்துவும் அந்த ஆவியையே பெற்று இயேசு கிறிஸ்துவுக்கு விரோதமாக செயல்படுவான். 

சபைக்கு இருக்கும் ஐந்து வகை ஊழியங்களும் தேவ ஆவியின் அழைப்பைப் பொறுத்தே அமைகின்றது என்பதை எவரும் மறுக்க முடியாது. கள்ளத் தீரக்கதரிசிகள், கள்ள அப்போஸ்தலர்கள், கள்ள மேய்ப்பர்கள், கள்ளப் போதகர்கள், கள்ள சுவிசேஷகர்கள் (வேறே சுவிசேஷத்தை பிரசங்கிப்பவர்கள்) ஆகிய இவர்கள் அனைவரும் சபைக்கு எதிரான தவறான ஊழியர்கள் மட்டுமல்ல, தவறான ஆவியையுடைய பொய் ஊழியர்களும் கூட.

4. புதிய சத்தியம்  (New Truth)
அனைத்து கள்ள உபதேசக் இயக்கங்களும் தங்களுக்குப் புது வெளிப்பாட்டைக் கடவுள் கொடுத்தார் என்றே கூறுகின்றன. புது அந்த உபதேச செய்திகளை தேவனிடமிருந்தும் பிரசித்திப் பெற்ற தேவமனிதர்களிடமிருந்தும் பெற்றுக் கொண்டனர் என்றும் சொல்லுகின்றனர். ஆனால் அந்தச் செய்திகள் மிகவும் மாறுபாடானதாகவும் சந்தேகப் படக்கூடியதாகவும் சிந்தித்துப் பார்த்தால் நாம் கிரகிக்க் கூடாத அளவு விகற்பமானதாகவும் இருக்கின்றன. 

சன் மங் மூன் (Sun Myung Moon) என்பவர் மூனிஸ் (Moonies) எனும் இயக்கத்தின் ஸ்தாபகர் “கிறிஸ்துவும் கிறிஸ்துவின் கூட்டத்தைச் சாரந்தவர்களும் தங்களுடைய சேவைகளை முற்றும் முடிய செய்யாது பாதியிலே விட்டுச் சென்று விட்டார்கள். இயேசு விட்டுச் சென்ற சேவை செய்து முடிக்கும் பொறுப்பு தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று மூன் கூறினார். ஒற்றுமைப்படுத்தும் சபை (Unification Church) என்னும் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் கடவுள் இதற்கு முன் வெளிப்படுத்தாத உண்மைகளையும், ஆழ்ந்த சத்தியங்களையும் போதகர் மூன் வெளிப்படுத்தினார் என்று கூறுகின்றனர். 

இயேசுவின் இருதயத்தையும் இயேசுவின் வேதனையும் இயேசுவின் நம்பிக்கையையும் எங்களால் மாத்திரமே அறிந்து புரிந்து கொள்ள முடியும் என்று கூறியிருக்கிறார். (Rev. Moon, The Way of the World, Holy Sprit) (Ass'n for the Unification of World Christianity Vol VIII, No 4, April 1976)

கடந்த பதினெட்டு நூற்றாண்டுகளாய் கிறிஸ்தவம் எவ்விதத் தெளிவும் வெளிப்பாடுமின்றிக் கிடந்த்து.. ஆனால் கடவுள் ஜூனியர் ஜேசப் ஸ்மித்துக்கு (Joseph Smith Jr.) கொடுத்த “புதிய சத்தியத்தால்“ சுவிசேஷம் இதுவரை இழந்துபோனதையெல்லாம் தக்க வைத்துக் கொண்டது. இன்றோ ஐக்கியப்படுத்தும் சபைக்கு தேவனிடமிருந்து தொடர்ச்சியாக பதிய தெய்வீக வெளிப்பாட்டைக் கொடுக்கும் ஜீவனுள்ள தீர்க்கதரிசிகள் இருக்கிறார்கள். அவர்கள் இந்த உலகத்திற்கு புதிய “சத்தியங்களை“ சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள் என்று மோர்மன் சபையார் (Mormon Churcch) கூறுகிறார்கள். 

இவ்வித இயக்கங்கள் எல்லாம் வேத அடிப்படையும் ஒழுங்கும் கிரமுமின்றி, அவ்வப்போது புதிய சத்தியங்களை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. அவர்களது சொந்தக் கருத்துக்களும் சுய வெளிப்பாடுகளும், வசன ஆதாரமற்று பிரசங்கிக்கப்படுகின்றன. கற்பனையான வெளிப்பாடுகளை வசனத்தோடு ஒப்பிட்டு தங்கள் இயக்கக் கொள்கைகளாக இவர்கள் வெளியிடுகிறார்கள்.

5. தவறான வியாக்கியானம் (Wrong Interpreation)
சில துர்உபதேச இயக்கங்கள் வேதத்திலிருந்து பல புதிய வியாக்கியானங்களைக் கொடுகின்றன. ஆவிக்குரிய வட்டாரத்தினர் ஒத்துக் கொள்ள முடியாத, தேவ மனிதர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் வசனத்தை வியாக்கியானம் செய்கின்றனர். அவர்கள் சொல்லுவதே உறுதியானதும், .இறுதியானதுமாக  நினைத்து, சத்தியத்தின் கருத்துக்களை புறம்பே தள்ளுகின்றனர். 

ஆவிக்குரிய திருச்சபைகளும் ஆவிக்குரிய மக்களால் அங்கீகரிக்கப்பட்ட சபைகளும் ஏற்றுக் கொண்டிருக்கும் மூல உபதேசங்களை இக்கூட்டத்தினர் தவறென காண்கிறார்கள். தேவ வசனத்தை மற்றவர்களெல்லாம் தவறாகப் படித்து புரிந்த கொண்டதையும் இவர்கள் மாத்திரமே சரியாய் படித்து போதிப்பதாயும் உரைக்கின்றனர். 

ஹெர்பட் ஆம்ஸ்ட்ராங் (Herbert W. Armstrong) என்பவர் “இன்றைய பிரபலமான முக்கிய சபைகள் போதிப்பதும் செயல்படுவதும் எதுவுமே வேதஅடிப்படையானதல்ல. இவர்கள் எதையோ படித்து சபைகளையோ போதனை செய்து கொண்டிருக்கிறார்கள்“. என்று கூறுகிறார். *The Auto Biography of Herbert W. Armstrong. Pasadena, Ambassador College Press 1967, 0.264, 298) சாதாரணமாக வேத அடிப்படைக் கருத்துக்களுக்கு தவறான விளக்கம் கொடுப்பதால் இவர்கள் துர்உபதேசக் கூட்டத்தைச் சேர்ந்தவர்களென்று அறிந்த கொள்ள முடியும். குறிப்பாக சில இறையியல் கல்லூரிப் பாடங்களும் இதற்கு உதவி செய்கின்றன. இவ்விதக் கள்ள ஊழியர்கள் தேவ விசுவாசத்தைக் கெடுக்க  முயற்சி செய்யும் ஊழியத்தைச் செய்து வருகின்றனர். 

6. திருச்சபைகளைப் புறக்கணித்தல்
துர்உபதேச இயக்கங்கள் சமநிலையுள்ள பாரம்பரிய திருச்சபைகளையும் ஆவிக்குரிய திருச்சபைகளையும் அறவே வெறுக்கின்றன. நமது ஆலய ஆராதனை ஒழுங்கு முறைகளையும் குற்றஞ்சாட்டுகின்றன. மறுபிறப்பு. ஞானஸ்நானம் ஆவியின் நிறைவு, தொழுகை, வரங்கள் இவைகள் முக்கியமற்றவை எனக்கூறி அப்புறப்படுதுகின்றனர். பாரம்பரிய திருச்சபைகளையும் அவர்களது கூட்டத்தினர் வெறுக்கின்றனர். 

ஆவிக்குரிய திருச்சபைகள் அனைத்தும் தேவ திட்டத்தோடும் அங்கீகாரத்தோடும் நடக்கின்றன. எந்தத் திருச்சபையும் ஆவியானவரின் அங்கீகாரம், தேவமக்களின் அனுமதி ஆகிய இரண்டையும் பெறும்போது சரியான சபைக்குரிய இடத்தைப் பெறுகின்றது. 

துர்உபதேசக் கூட்டத்தினர் இப்படிப்பட்ட எந்த சபையையும் ஏற்க மறுக்கின்றார்கள். காரணம் சொல்லும் புதுமையான மாறுபாடான உபதேசத்திற்கு நமது சபைகள் இசைவதில்லை. அவர்களின் கருத்துக்களைப் பறம்பே தள்ளி சபை மக்களைப் பாதுகாப்பதால் சரியான சபைகள் மீது இக்கூட்டத்தினர் கோபமும் பொறாமையும் கொள்கின்றனர். 

தேவனை  ஆராதித்து தொழுகை நடத்துதலை இவர்கள் விரும்புவதில்லை. ஆனால் இவர்கள் நடத்தும் தொழுகை மிகவும் வித்தியாசமானதாகவே இருக்கிறது. தொழுகையில் நல்ல பாடல்களையோ தேவனை மகிழ்விக்கும் கீதங்களையோ சேர்ப்பதில்லை. ஆராதனையில் இவர்களுக்கு வேத செய்தியைக் கொடுக்கும் நபர் நல்ல பரிசுத்தவனாக இருக்கமாட்டார். சிலரது ஆராதனையில் அப்பம் பிட்கும் கர்த்தருடைய பந்தி என்பது கிடையாது, ஆவியின் நிறைவு, அந்நிய பாஷை பேசுதல, ஆவிக்குரிய வரங்களின் கிரியைகள் ஆகியவற்றை துர்உபதேசக் கூட்டத்தினர் ஒருபோதும் மதிப்பதில்லை. 

எனவே இப்படிப்பட்ட நியமங்களைக் கடைப்பிடிக்கும் சபைகளைப் பார்த்து இவர்கள் குறை கூறுகிறார்கள். அந்த சபைகளுக்கு விரோதமாய் செயல்படுகிறார்கள். சபையின் ஆட்களை வஞ்சித்து தங்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளகிறார்கள். எதைச் செய்தாலும் திரித்துவ சபைகளுக்கு எதிராகவே செய்கின்றார்கள். அதே நேரத்தில் இவர்களின் ஆராதனைகள் பெரும்பாலும் அந்தரங்கமான இடங்களிலேயே நடத்தப்படுகின்றன. அங்கத்தினரைத் தவிர மற்றவர்களை அத்தனை எளிதில் இவர்கள் உள்ளே அனுமதிப்பதில்லை. 

7. இரட்டைப் பேச்சு
சில துர்உபதேசக் கூட்ங்களில் இரட்டைப் பேச்சுக் நிறைந்திருக்கின்றன. அவர்கள் நம்மோடு பேசுவது ஒன்று. ஆனால் மனதில் வைத்துக் கொண்டிருக்கும் கருத்து வேறொன்று. இரட்டைச் செய்திகளும் இரட்டைக்  கருத்துக்களும் ஒவ்வொருவரிடமும் காணப்படுகின்றன. உண்மையான சத்தியத்தில், ஆழ்ந்த சரியான நம்பிக்கையுள்ளவர்கள் போல வெளித்தோற்றத்தில் காணப்பட்டாலும் விசுவாத்தின் எவ்வித அடிப்படை அம்சமும் உள்ளத்தில் இருப்பதில்லை. 

தங்களை நல்ல கிறிஸ்தவர்களாய்க் காட்டிக் கொண்டு மக்களுக்கு முன்விசுவாசிகள் போல் நடிக்கிறார்கள். மக்கள் அவர்களோடு நெருங்கிப் பழகிய பின்னர்தான் அவர்கள் உள்ளத்தில் கொண்டுள்ள கருத்துக்களையும் தவறான விசுவாச நம்பிக்கைகளையும் புரிந்து கொள்ள முடிகின்றது. 

மோர்மன் சபையினர் இதற்கு ஒரு உதாரணம்

பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசுகிறிஸ்துசபை (The Church if Jesus Christ of Latter-day Saints) தனது செய்தி ஒன்றில் “அவருடைய குமாரனான இயேசு கிறிஸ்துவை நாங்கள் விசவாசிக்கிறோம்“ என்று எழுதியிருந்தார்கள். இந்த அறிக்கையைப் படிக்கம் மக்கள். இது கிறிஸ்தவ மக்கள் பங்கேற்கு்ம் திருச்சபைகளில் ஒன்று என நினைக்கத் தோன்றும் ஆனால் உண்மையென்னவென்றால் அவர்கள் சொல்லும் செய்திகளின் மறுபக்கம் விசவாசத் துரோகம் அடங்கியிருக்கிறது. 

இவ்வித இயக்கங்களின் உறுப்பினர்கள் தங்களையும் கிறிஸ்தவர்கள் என அழைத்துகு் கொள்ளத் தயங்குவதில்லை. கிறிஸ்தவர்கள் போல் பேசிப் பழகி கடைசியில் தாங்கள் சார்ந்து வாழும் உத்தேச இயக்கங்களோடு மற்றவர்களையு் இணைத்து விடுகிறார்கள். 

8. தேவ தன்மைகளை மறுத்தல்
பிதா, குமாரன், பரிசுத்தாவி என்னம மூன்று பேரும் ஒருவரே.இவர்கள் தனித்தனி காலக்கட்டங்களில் செயல்பட்டவர்கள். பழைய ஏற்பாட்டுக் காலம் பிதாவின் காலம். புதிய ஏற்பாட்டுக் காலம் இயேசு கிறிஸ்துவின் காலம். நாம் வாழ்நது கொண்டிருக்கு இந்தக் காலமோ ஆவியானவரின் காலம். ஆனால் இம்மூவரும் ஒருவரே என்று கிறிஸ்தவர்கள் நம்புவது போல இவ்வியக்கத்தார் நம்புவதில்லை தேவனது இந்த திரித்துவ தெய்வத் தன்மைகளை அடியோடு மறுக்கின்றனர். யெகோவா சாட்சிகள் தேவனுடைய வார்த்தையில் திரித்துவத்திற்கான எவ்வித ஆதாரங்களுமில்லை என்கின்றனர். (Charles Russell, Studies in the Scriptures, V, Brooklyn, Indernational Bible Students 1912, p54)

கிறிஸ்தவம் தோன்றின காலத்தில் கடவுள் மூன்று விதங்களில் செயல்படுகிறார் என்ற கருத்து இருந்த்து. ஆனால் இதே கருத்து கிறிஸ்தவம் தோன்றிய நாட்களில் இருந்த பழம்  பெரும் மதங்களிலும் இருந்த. அந்த மதங்கள் கடவுள் மூன்று தன்மைகளிலிருந்தும் அதற்கு மேலும் செயல்படுகிறார் என்ற கூறின. பாவிலோனியர் இவ்வித மூன்றில் ஒன்று (Three in one) எனும் தன்மையைக் கொண்ட கடவுளை வழிபட்டனர். அந்நாட்களில் தான் இக்கொள்கை நவீன விசுவாசிகளின் சின்னமாகிவிட்டது.“ என்று உலகளாவிய வழி (The Way international) எனும் கூட்டத்தார். திரித்துவத்தைக் குறித்து கூறுகின்றனர். Jesus Christ is not God, Wierwile, New Knowville, Ohio)